
WILL – விமர்சனம்
ஆந்திராவை சேர்ந்த தொழிலதிபர் பதம் வேணுகுமார் அவர் இறக்கும் போது தன் சொத்துக்களை இரண்டு மகன்களுக்கு சரிசமமாக உயில் எழுதி வைத்ததுடன், சென்னையில் இருக்கும் இரண்டு கோடி ரூபாய் மதிப்புள்ள ஒரு அடுக்குமாடி வீட்டை அலக்கியா என்ற பெண்ணுக்கு உயில் எழுதி வைத்து விடுகிறார்.
இதனால் கடும் கோபத்திற்குள்ளாகும் மகன்கள். அந்த சென்னை வீட்டை தங்களுக்கு சாதகமாக்கிட அதே பெயரில் ஒரு பெண்ணை ஆள் மாறாட்டம் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் செய்கின்றனர். நீதிபதியாக இருக்கும் சோனியா அகர்வாலுக்கு, இந்த ஆள் மாற்றட்ட பெண்ணின் மேல் சந்தேகம் எழ இந்த வழக்கின் பின்னணியில் உண்மையை விசாரிக்கும் பொறுப்பை நீதிமன்ற சப் இன்ஸ்பெக்டர் விக்ராந்த்திடம் ஒப்படைக்கிறார்.
விக்ராந்த்தின் விசாரணையில் அந்த பெண் போலியானவர் உண்மையிலேயே சென்னையைச் சேர்ந்த இலக்கியா தான் அந்த பத்திரத்தில் எழுதப்பட்டுள்ள பெண் என்பதும் தற்போது கோத்தகிரியில் திருமணம் செய்து கொண்டு வாழ்கிறார் என்பதும் விக்ராந்துக்கு பெரிய வருகிறது.
ஆனால் அளக்கியாவின் தாய் தந்தையோ அப்படி ஒரு தொழிலதிபரையே தங்களுக்கு தெரியாது என்கிறார்கள். அப்படியானால் அலக்கியாவிற்கும் பதம் வேனுகுமாருகும் உள்ள தொடர்பு என்ன? எதனால் அவர் இரண்டு கோடி மதிப்புள்ள வீட்டை எழுதி வைத்தார்? அளக்கியாவிடம் ஒளிந்திருக்கும் மர்மம் என்ன என்பது மீதிக்கதை.
நீதிபதியாக நடித்திருக்கும் சோனியா அகர்வால், தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்.
சப் இன்ஸ்பெக்டராக விக்ராந்த் நடித்திருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் முக்கிய பாத்திரம் என்பதும், அதில் அவரது பங்களிப்பும் சிறப்பு.
படத்தின் முக்கிய புள்ளியாக இருந்து கதையின் நகர்விற்கு அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் ஷெரத்தாவாக நடித்துள்ள அலக்கியா. பணத்திற்காக சூழ்நிலை கைதியாக ஒருவரிடம் மாட்டிக் கொண்டு அதிலிருந்து தப்பிக்க நினைக்கும் நேரத்தில் மீண்டும் அவர் மேல் ஈர்க்கப்பட்டு தடம் மாறுவது டீனேஜ் வயதில் உள்ள பெண்கள் என்ன மாதிரி மனநிலையில் இருக்கிறார்கள் என ஆச்சர்யத்தை எழுப்புகிறது.
பணம் வைத்திருக்கும் ஒருவர் இளம் பெண்ணை எப்படி பயன்படுத்திக் கொள்கிறார் என்பதை தன்னுடைய வில்லத்தனம் இல்லாத நடிப்பால் சிறப்பாக காட்டி இருக்கிறார் பதம் வேணு குமார்.
பிர்லா போஸ் தான் வாங்கிய பணம் மிகப் பெரிய சுமையாக கழுத்தை நெரிக்கிறது என்பதை உணர்ந்து ஒரு மிடில் கிளாஸ் அப்பாவாக தன்னால் என்ன செய்ய முடியுமோ, அத்தனையும் செய்து ஒரு பரிதாப உணர்வை காட்டி இருக்கிறார்
பின்னணி இசை சராசரியாக இருந்தாலும், ஒளிப்பதிவு (டி.எஸ். பிரசன்னா) மற்றும் எடிட்டிங் (ஜி. தினேஷ்) சிறப்பாக அமைந்துள்ளன.
இயக்குநர் S.சிவராமன் உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இந்தக் கதையை எழுதியுள்ளார்.. நீதிமன்ற காட்சிகள், ஒரு வழக்கை நீதிபதி கையாளும் விதம் ஆகியவை படத்தை ரசிக்க வைக்கிறது கொஞ்சம் சஸ்பென்ஸ், திரில்லராக இந்தப் படம் திசை மாறும்போது அந்தக் காட்சிகளை ஆபாசமாக நீண்டு விடாமல் கொஞ்சம் தடுத்து ஒரு திரில்லர் டைப்பில் படத்தை நகர்த்தி இருக்கிறார்.
.
.
