கேம் ஆப் லோன் ; விமர்சனம்

 

அறிமுக இயக்குனர் அபிஷேக் லெஸ்லி இயக்கத்தில் வரும் 17ம் தேதி வர இருக்கும்  திரைப்படப் கேம் ஆப் லோன். படம் என்ன சொல்ல வருகிறது.

நிவாஸ் ஆதித்தன் கொரோனா காலகட்டத்தில் வேலை பறிபோய் வீட்டில் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாமல் ஆன்லைனில் சூதாட்டம் விளையாடி அதற்கு பணம் பத்தாமல் லோன் வாங்கி அதில் விளையாடி அதில் தோற்று மீண்டும் கடன் வாங்கி விளையாடி கிட்டத்தட்ட 65 லட்சத்துக்கு மேல் அவருக்கு கடன் பாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்தக் கடனை கட்ட முடியாமல் இருக்கும் நேரத்தில் அவரிடம் கடன் வசூல் செய்ய அபினய் அவர்களுடன் வேலை செய்யும் நிறுவனர் வீட்டிற்கு வந்து மிரட்ட பிறகு என்ன நடக்கிறது என்பதே மீதி கதை

கடன் பட்டார் நெஞ்சம் போல் கலங்கினான் இலங்கை வேந்தன் என்ற பழமொழி நாம் அனைவருக்கும் அறிந்தது. கடன் வாங்குவது இந்த காலகட்டத்தில் மிகவும் எளிது. ஆனால் அந்த கடனை அடைக்க நாம் படும் பாடு சொல்லி மாளாது. நிவாஸ் ஆதித்தன் கடன் வாங்கி கடன் வாங்கி சூதாட்டம் ஆட, அந்த சூதாட்டமே ஒரு போதையாகி அவர் உயிரை பறிக்கப் போகிறது என்பது படம் சொல்ல வரும் கருத்து.

எந்த ஒரு பிடிமானமும் இல்லாமல் கடன் எப்படி தருகிறார்கள் என்பது இந்த படத்தை பார்க்க மக்கள் மிக எளிதாக தெரிந்து கொள்ளலாம். நாம் கடன் வாங்கும் போதே நம் மீது கடன் கொடுப்பவர்கள் இன்சூரன்ஸ் எடுத்து விடுகின்றனர். நம்மால் கடன் கட்ட முடியவில்லை என்றால் அதன் விளைவாக நாம் தற்கொலை செய்து கொண்டால் அந்த இழப்பீட்டுத் தொகை நிறுவனத்திற்கு சேரும்.

இந்த படத்தில் பணம் ரெக்கவர் செய்யும் ஆபீஸராக வரும் அபிநய் நாயகனை மிரட்டும் காட்சிகள் மிக அருமை. வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல் அவர் வாய்மொழி வசனங்கள் அழகாக வெளிப்படுகின்றன. நாயகனை தற்கொலை செய்ய அவர் தூண்டும் விதம் மிக எதார்த்தம். நாயகனும் எதிர் நாயகனும் போட்டி போட்டுக் கொண்டு தங்கள் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கின்றனர்.

அபிநய் உடன் வரும் நபரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார் நாயகனின் மனைவியாக வரும் எஸ்தர் காட்சிகள் குறைவு என்றாலும் நிறைவான நடிப்பை தந்திருக்கிறார்.

இயக்குனர் அபிஷேக் லெஸ்ஸி தன் கதைக்களத்தை ஒரு அப்பார்ட்மெண்ட்க்குள் அடக்கி அதற்கேற்றார் போல் திரைக்கதை வடிவமைத்து எந்த ஒரு இடத்திலும் பார்க்கும் ரசிகனுக்கு சலிப்புத் தட்டாமல் மிகச் சிறப்பாக தன் இயக்கப் பணியை செய்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த காலகட்டத்தில் மக்களுக்கு தேவையான விஷயத்தை தேவையான நேரத்தில் படமாக தந்திருக்கிறார் அவருக்கு நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். அதே சமயம் படத்தின் கேமராமேனையும் நம் பாராட்டியாக  வேண்டும். குறுகிய இடத்தில் தன் ஒளிப்பதிவை சிறப்பாக செய்த ஒளிப்பதிவாளர் சபரிக்கும் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

கேம் ஆப் லோன் – படம் அல்ல பாடம்

ரேட்டிங்-3/5-5