
டியூட் – விமர்சனம்
கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் இயக்குநரும் நடிகருமான பிரதீப் ரங்கநாதன் மற்றும் மமிதா பைஜு நடித்திருக்கும் ‘ட்யூட். படம் என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம்.
ஜாலியாக ஊரை சுற்றிக்கொண்டு பார்க்கும் பெண்களை காதலித்து அது பிரேக்கப் ஆகி, பிரேக்கப் ஆன காதலியின் கல்யாணத்தில் பிரேக்கப்பிறகு காரணம் கேட்கும் நாயகன், காதலியின் தாலியத்துவிடஅதனால் ஏற்படும் பிரச்சனையில் காவல் நிலையம் செல்லும் நாயகன், அவனைக் காப்பாற்ற அவரின் மாமன் மகள் உதவி செய்கிறார்.
அதேசமயம் பலரின் முன்பாக தன் காதலை மாமனிடம் சொல்ல, அப்போது அந்த காதலை ஏற்க மறுக்கும் நாயகன் பிறகு நாயகி இடம் நட்பு வேறு காதல் வேறு என்று சொல்லி காதலுக்கு முற்றுப்புள்ளி வைக்கிறார். அதனால் மன உளைச்சலில் நாயகி வெளிநாடு செல்ல பிறகு தெரிய வருகிறது நாயகனுக்கு நாயகியை தானும் காதலிப்பதாக.
காதலியின் தந்தை தன் தாய்மாமன் அமைச்சர் சரத்குமார் இடம் கல்யாணத்தை நடத்த சொல்ல சந்தோசத்தில் அமைச்சர் சரத்குமார் கல்யாணத்துக்கு ஏற்பாடு செய்கிறார். அங்கு நாயகி தான் வேறு ஒருவரை காதலிப்பதாக நாயகனிடம் சொல்ல அவர்கள் காதலை சேர்த்து வைக்க நாயகன் முயற்சி செய்ய அதற்கு தடை செய்கிறார் அமைச்சர் சரத்குமார்.
நாயகியை நாயகன் மணம் முடித்தாரா? இல்லை காதலை சேர்த்து வைத்தாரா? என்பதே மீதி கதை.
இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இளைஞர்களை தன் வசப்படுத்த என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை இந்த படத்தின் திரைக்கதை மூலம் நிரூபித்திருக்கிறார். படம் ஆரம்பித்தது முதல் இடைவேளை வரை நான் ஸ்டாப் கலகலப்பு காமெடி தான்.
நாயகன் பிரதீப் ரங்கநாதன். இது அவருக்கு மூன்றாவது படம் என்றாலும் இந்த படம் இவருக்கு ஒரு ஹாட்ரிக் வெற்றியை தந்திருக்கிறது. ஒரு பிளேபாய் கதாபாத்திரம்தான்.. அதற்குள் ஒரு காதலன். அதற்குள் ஒரு கணவன். அதற்குள் ஒரு பிரேக்கப் என பலவித பரிமாணங்களை நம் முன் கொண்டு வந்து நம்மையும் நம் மனதையும் அவர் வசப்படுத்தி விடுகிறார். அவரின் முக பாவங்களும் வசன உச்சரிப்புகளும் நம்மை அவருக்குள் ஆட்கொண்டு வருகிறோம்
பிரேக்கப்பிற்கு காரணம் கேட்டு கல்யாணத்தில் அவர் கலாட்டா செய்யும் ஆரம்பக் காட்சிகளே அலம்பல். அதே சமயம் தன் மாமன் மகள் காதலை சேர்ப்பதற்காக அவளை கல்யாணம் செய்து அவன் காதலனிடம் ஒப்படைப்பதற்காக அவர் செய்யும் தியாகம் ஒரு பக்கம் பரிதாபமாக இருந்தாலும் மறுபக்கம் நமக்கு ஒரு நகைச்சுவை கலாட்டா.
மமீதா பைஜூ பல்லழகி என்று இவரை கூறலாம். இவரின் சிரிப்பு ஆண்களை கட்டிப்போடும் மாயையான சிரிப்பு. இவருக்குள் நடக்கும் போராட்டம் அதை இவர் வெளிப்படுத்தும் விதம் மிகவும் சிறப்பு. தான் காதலித்தவன், தன்னை காதலித்தவன் யார் உயர்ந்தவர்கள் என்று எடை போடும் காட்சி அழகு.
சரத்குமார் இந்த படத்தில் ஏற்றிருக்கும் கதாபாத்திரம் இதுவரை எந்த தமிழ் சினிமாவிலும் இவர் ஏற்றிராத சிறப்பான கதாபாத்திரம். நகைச்சுவை நாயகன் என்று சொல்வதா? அல்லது வில்லன் என்று சொல்வதா? என்று தெரியாமல் இரண்டையும் சரிசமமாக கலக்கி ஒரு காமெடி வில்லனாக நமக்கு கலகலப்பு ஏற்றுகிறார்.
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ, சரத்குமார் இவர்கள் செய்யும் தில்லாலங்கடிகளை “பிராங்க்” என்று சொல்லி அடிக்கும் லூட்டி தியேட்டரில் விசில் பறக்கிறது.
மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பாக தங்கள் பணியை செய்திருக்கின்றனர்.
அடுத்து நம் பாராட்டுக்குரியவர் இசையமைப்பாளர் சாய் அபயங்கர். பாடல்கள் அனைத்தும் தெறிக்க விடுகிறார். ஒவ்வொரு பாட்டும் இளவட்டங்கள் தியேட்டரில் விசில் அடித்துக் கொண்டாடுகின்றனர். விரல் விட்டு எண்ணக்கூடிய இசை அமைப்பாளர்கள் வரிசையில் இவர் இடம் பெறுவது உறுதி.
படத்தின் முற்பாதி கலகலப்பாகவும் பரபரப்பாகவும் சென்றாலும் பிற்பாதியில் ஒரு எதார்த்தமான நிகழ்வுக்குள் படத்தை நகர்த்தி செல்கிறார் இயக்குனர்.
டியூட் – தீபாவளி சரவெடி
ரேட்டிங் – 4/5
