வேடுவன் (வலைத்தொடர் ) – விமர்சனம்

 

கூலி புகழ் கண்ணா ரவி, சின்னத்திரை புகழ் சஞ்சீவ், வினிஷா தேவி, ரேகா நாயர், லாவண்யா நடிப்பில் பவன் இயக்கத்தில் Z 5 ஒரிஜினல் வலை தொடர் iஇன்று முதல் வெளி வருகிறது

வேடுவன் என்ன சொல்ல வருகிறது ?

- Advertisement -

தமிழ் திரை உலகில் நட்சத்திரமாக ஜொலிக்கும் கண்ணா ரவிக்கு தோல்வி படங்கள் அதிகம். ஒரு புதுமுக இயக்குனர் ஒரு உண்மை கதையை அதுவும் ஒரு போலீஸ் அதிகாரியின் கதையை சொல்ல அதில் நடிக்கிறார்.

காவல்துறையில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் அருண்மொழி ரவுடிகளை நெற்றி பொட்டில் சுட்டு சட்டத்தைக் காக்கும் “அண்டர் கவர்” ஆபிசர். அவரிடம் தென் தமிழகத்தில் ரவுடியிசம் மூலம் தன் கண்ட்ரோலில் வைத்திருக்கும் சஞ்சீவிவை என்கவுண்டர் செய்யும் பொறுப்பு ஒப்படைக்கப்படுகிறது.

புரோட்டா மாஸ்டராக ஒரு ஹோட்டலில் வேலை செய்து சஞ்சீவை கண்காணிக்கிறார் கண்ணா ரவி.

அதே சமயம் அவரின் கல்லூரி காதலி அதே ஊரில் இருக்க இருவரும் சந்தித்துக் கொள்ளும் நேரத்தில் சஞ்சீவ் தான் தன் காதலியின் கணவன் என்று தெரிய வருகிறது.

கடமையா ? முன்னாள் காதலியா? என்று குழப்பத்தில் நாயகன் இறுதியில் என்ன நடக்கிறது. இதுவே வேடுவன் கதையின் கரு.

ஒரு திரை நட்சத்திரமாக ஜொலிக்கும் கண்ணா ரவிக்கு தன் நடிப்புத் திறனை வெளிப்படுத்த ஒரு சிறந்த கதாபாத்திரம் இந்த வேடுவனில் அருள்மொழி கதாபாத்திரம். ஒரு போலீஸ் அதிகாரியாக தன் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கிறார். அதே சமயம் கல்லூரி காதல் காட்சிகளில் ஒரு வாலிபப் பருவத்தின் குறும்பு அதுவும் சிறப்பு.

தன் காதலித்த காதலியின் கணவனை கொல்ல வந்திருக்கிறோம் என்ற எண்ணத்தில் அவர் தவிக்கும் தவிப்பு இவரின் நடிப்புக்கு ஒரு எடுத்துக்காட்டு. வருங்காலம் இவருக்கு தமிழ் திரை உலகில் சிறப்பான வரவேற்பு இருக்கும் என்பது இந்தத் தொடரே சாட்சி.

சஞ்சீவ், சிறுவயதில் பல கொலைகள் செய்து பிறகு ஊரின் பெரிய மனிதனாக மக்கள் மனதில் இடம் பிடித்து தன் மனைவியை அம்மா ஸ்தானத்தில் வைத்து சாந்திமா… சாந்திமா… என்று அவர் அழைக்கும் வசன மொழி அழகு.

சஞ்சீவ் என்றாலே ஒரு அலட்டலான நடிப்பு இருக்கும் என்பது சின்னத்திரையின் வட்டாரப் பேச்சு. ஆனால் இந்த வலைத்தொடரில் அலட்டல் இல்லாமல் ஒரு மிகப்பெரிய “தாதா”, அந்த கதாபாத்திரத்தை மிக அழகாக அருமையாக தன் நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருக்கிறார்.

தமிழ் திரை உலகம் இவரை கண்டு கொள்ளாமல் விட்டது ஏன் ?என்று ? நமக்குத் தெரியவில்லை.

சின்னத்திரையில் இவர் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தாலும் வெள்ளித்திரையின் வெற்றியை இந்த வலைத்தொடர் இவருக்கு வழங்கும் என்பது ஐயமில்லை.

இவருக்கு மனைவியாக வரும் வினிஷா தேவி கருப்பு காந்தழகி. நிறம் கருமை என்றாலும் அதில் ஒரு காந்த சக்தியும் கண்களில் ஒரு மின்சாரமும் நமக்குத் தெரிகிறது. இவரின் காதல் காட்சிகள் குறைவு என்றாலும், சஞ்சீவின் மனைவியாக காட்சிகள் நிறைவு. இவரின் நடிப்பும் நிறைவு.

ரேகா நாயர் “ஃபுல்” மப்பில் இவரின் வசன மொழி நமக்கு “சொர்ணாக்காவை” ஞாபகப்படுத்துகிறது. மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இயக்குனர் பவன் இவர் வெள்ளித் திரையில் சில படங்களை இயக்கியிருக்கிறார்.  சின்னத்திரையிலும் பல வெற்றி தொடர்களை நமக்கு தந்திருக்கிறார். “ஆட்டோ சங்கர் ” வாழ்க்கை வரலாற்றில் அமைச்சராக இவரின் நடிப்புத் திறனை நாம் பார்த்து ரசித்திருக்கிறோம்

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தை நேரடியாக சொல்லாமல் ஒரு திரை நட்சத்திரம் மூலம் இவர் ஏன் சொல்ல வேண்டும்?

வேடுவனில் இவர் சொல்ல வரும் கருத்து ?

நாம் பார்த்த., பார்க்கின்ற, பார்க்கப் போகின்ற உண்மை கதைகளில் சொல்வதெல்லாம் உண்மை அல்ல என்பதை சொல்ல வருகிறார். அந்த உண்மைக்குள் பொய் நிறைந்திருக்கும். அந்தப் பொய்யை உண்மை என்று நாம் ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.. பார்க்கவும் போகிறோம்..

ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரியின் கதையை ஒரு புதிய பாணியில் அதுவும் மக்கள் ரசித்தும் யோசிக்கும் வகையில் திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கும் இயக்குனருக்கு நம் focusone cinema சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வேடுவன் – கதையல்ல நிஜம்

ரேட்டிங்-3/5