
சிக்மா – திரை விமர்சனம்
சந்தீப் கிஷன் ஃபரியா அப்துல்லா, சம்பத், ராஜு சுந்தரம், சிவ்பாண்டிநடிப்பில் வந்திருக்கும் படம் சினிமா தமிழக முதல்வர் ஜோசப் விஜய்யின் மகன் முதன்முதலாக இயக்கி இருக்கும் படம் தயாரிப்பு லைக்கா
படம் என்ன சொல்லுகிறது
கடனில் சிக்கித் தவிக்கும் சந்தீப் கிஷன் தனது அம்மாவின் நினைவான நூலகத்தை காப்பாற்ற காசு தேடுகிறான். கேசினோவுக்கு போகிறான், தோக்கிறான் பென் டிரைவ், ஒரு சாவி கிடைக்கிறது. அந்த பென் டிரைவுக்கு கிடைக்கிறது அதில் என்ன இருக்கிறது, என்று பார்த்தால் போதை உலகம் தெரிகிறது அதை வைத்து நாயகன் பிளாக்மெயில் செய்ய அதை தேடி ஆந்திராவில் இருந்து சம்பத் கும்பல் வருகிறது, பிறகு என்ன நடக்கிறது எனபதே சிக்மா
முதல் 40 நிமிடம் வேஸ்ட்:
கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யவே 40 நிமிடம் எடுத்துக்கொள்கிறார்கள். குருவின் கடன், அம்மா செண்டிமெண்ட், நூலகம் என்று அழுது வடிகிறது. ஒரு ஆக்ஷன் படத்திற்கு தேவையான வேகம் முதல் பாதியில் சுத்தமாக இல்லை. படம் தொய்வாக நகர்கிறது.
தெளிவில்லாத திரைக்கதை:*
கதை புதிது கிடையாது. பல வருடங்களுக்கு முன்பே பார்த்த பென் டிரைவ் – கோடி ரூபாய் – மாஃபியா கதை தான். திரைக்கதையில் ஒரு புதுமை இல்லை, ஒரு ட்விஸ்ட் கூட பார்வையாளரை ஆச்சரியப்படுத்தவில்லை. “இதற்கு பிறகு இது தான் வரும்” என்று யூகிக்க முடிகிறது. பெரிய மாஸ் தருணமோ, மிரட்டும் திருப்பமோ இல்லை. படத்தில் 70-க்கும் மேற்பட்ட காட்சிகள் வருகின்றன ஆனால் ஒவ்வொரு காட்சியும் ஒவ்வொரு படத்தை பார்த்தது போல்இருக்கிறா
ஃபரியா அப்துல்லா ஹீரோயின் என்ற பெயரில் வந்து போகிறார். தேர்வு சரியில்லை. சம்பத், ராஜு சுந்தரம், சாரங்கி, எழில், வின்சி என 10 கதாபாத்திரங்கள் இருக்கிறார்கள், ஆனால் ஒருவருக்கும் பின்னணி, ஆழம் இல்லை. மனதில் ஒட்டவில்லை.
ஜேசன் சஞ்சய் மேக்கிங் ஸ்டைலாக இருக்கிறது, விஷுவல் பரவாயில்லை என்றாலும் தமனின் பாடல்கள், பரவாயில்லை
மொத்தத்தில் முதல் படம் என்பதால் பொறுத்துக்கொள்ளலாம், ஆனால் ஜேசன் சஞ்சய் இயக்குனராக பெரிதாக ஜெயிக்கவில்லை.
சிக்மா – சிக்- மா
*ரேட்டிங்: 1.5 /5
