பத்தா – திரை விமர்சனம்

 

விஜய் சேதுபதி சிறுவன் சாய் பிருத்விராஜ் , லிஜோமோல் ஜோஸ், சகஸ்ரா, அஜய் கோஷ்நடிப்பில்பாலாஜி தரணிதரன் இயக்கத்தில்

 

பத்தா என்கிற பக்தவத்சலம் (விஜய் சேதுபதி) – ஊரே பயப்படும் ரவுடி. சாராயம் காய்ச்சுவது, கட்டப்பஞ்சாயத்து செய்வது தான் தொழில். வீட்டில் மனைவி லிஜோமோல், மகள் சகஸ்ராவிடம் கூட எப்போதும் கோபமாகவே இருப்பவன்.

- Advertisement -

அதே ஊரில் 8 வயது சுட்டிப்பையன் சபரி விளையாட்டாக மூடப்பட்ட பள்ளியின் கழிவறைக்குள் சென்ற விஜய் சேதுபதியை வெளியில் தெரியாமல் பூட்டி விட்டு ஓடிவிடுகிறான். பூட்டியது பயங்கர ரவுடி என்று தெரிந்ததும் சிறுவன் நடுநடுங்குகிறான்.

ஒரு கழிவறைக்குள் மாட்டிக்கொண்ட ரவுடி, வெளியே அவனை பூட்டிய சிறுவன். யாருக்கும் தெரியாமல் இருவருக்கும் இடையே ஒரு விசித்திர உறவு உருவாகிறது. ஆரம்பத்தில் மிரட்டும் பத்தா, பின்பு கெஞ்சும் பத்தாவாக மாறுகிறான்..

அந்த நேரத்தில் பத்தாவின் உயிருக்கே ஆபத்து வருகிறது. வெளியே எதிரிகள் தேடுகிறார்கள். சிறுவன் அவனை காப்பாற்றினானா? பள்ளிக்கு இருவரும் ஏன் வந்தார்கள்? என்பதே இரண்டாம் பாதி..

விஜய் சேதுபதி முதல் காட்சியில் மிரட்டல், கழிவறைக்குள் கோபம், பிறகு கெஞ்சல் என ஒரு புதிய விஜய் சேதுபதி நமக்கு தந்திருக்கிறார் இயக்குனர்

சிறுவன் சாய் படத்தின் உண்மையான ஹீரோ இவன் தான். பயம், பதற்றம், பாசம், குறும்பு என நடிப்பில் கலக்கி இருக்கிறான் மரத்தடியில் பத்தாவும் சபரியும் பேசும் காட்சி ஹைலைட்

சாய் அபயங்கரின் BGM காட்சிகளை தூக்குகிறது. லிஜோமோல் ஜோஸ் ஜெய் பீம்-க்கு பிறகு மீண்டும் ஸ்கோர் செய்கிறார். கதை 1980ல் நடக்கிறது ஆனால் படத்தின் துவக்கத்தில் 1966இல் மரத்தை அறுத்து கதவு செய்யப்படுகிறது எதற்காக இந்த காட்சி என்று நாம் நினைத்தால் பிறகு தான் புரிகிறது அந்த கதவு தான் பத்தா மாற்றிக் கொண்ட பாத்ரூம் கதவு இதை நாமே நம் மனதுக்குள் நினைத்துக் கொள்ள வேண்டும் இயக்குனர் இதை தொடர்பு படுத்தவில்லை ஆனால் இறுதியில் மேடை அமைக்கும் பணியாளர் ஒரு வயதான மனிதன் காட்டப்படுகிறார் அவர்தான் 66 இல் கதவு செய்தவன் இதுவும் நாமலே கற்பனை செய்து கொள்ள வேண்டியதுதான்

பத்தா – என்று சொல்லும் அளவுக்கு உணர்வுப்பூர்வமான, அழகான படம். விஜய் சேதுபதி & சிறுவன் கெமிஸ்ட்ரிக்காகவே பார்க்கலாம். குடும்பத்துடன் பார்க்கலாம்.

*ரேட்டிங்: 4 / 5