கருப்பு பல்சர் ; விமர்சனம்

 

அட்டகத்தி தினேஷ், ரேஷ்மா வெங்கடேஷ், மன்சூர் அலிகான், சரவண சுப்பையா, காளீஸ்வரன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கருப்பு பல்சர், படம் என்ன சொல்ல வருகிறது ?

நாயகன் தினேஷ் தண்ணீர் சுத்தம் செய்யும் மிஷின் வியாபாரம் செய்கிறார். மன்சூர் அலிகான் வாட்டர் கேன் வியாபாரம் செய்கிறார். நாயகனின் வியாபாரத்தால் தண்ணீர் கேன் வியாபாரம் பாதிக்கப்படுகிறது. அதனால் நாயகனை கொலை செய்ய முயற்சிக்கிறார் மன்சூர் அலிகான்.

- Advertisement -

இது ஒரு புறம் இருக்க மதுரையில் எதிர் நாயகனுக்கு அவரது பல்சர் வண்டியினால் பிரச்சனை வருகிறது. அதனால் கடன் கேட்டு வரும் மன்சூர் அலிகான் இடம் அந்த பல்சர் பைக் இலவசமாக கொடுத்து விடுகிறார். அந்த பல்சர் பைக் வந்தவுடன் பல வினோத சம்பவங்கள், எதிர்பாராத கொலைகள் நடைபெறுகின்றன. இதனால் பல்சர் பைக்கை விற்க மன்சூர் அலிகான் முயற்சிக்க, நாயகனின் காதலி தனக்கு பல்சர் பைக்கில் செல்ல வேண்டும் ஆசைப்பட பல்சர் பைக் வாங்குகிறார் நாயகன்,

ஜோடியாக சென்ற நாயகனுக்கு அந்த பல்சர் பைக் மூலம் எதிர்பாராத விபத்து ஏற்படுகிறது. அந்த பைக்கில் யார் ஜோடியாக சென்றாலும் விபத்து ஏற்படுகிறது ஏன் ? விடை சொல்கிறது கருப்பு பல்சர்.

நாயகன் அட்டகத்தி தினேஷ். இவரின் நடிப்பை பற்றி நாம் பெரிதாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒரு எதார்த்த நாயகன்/ பக்கத்து வீட்டு பையன் போல் நமக்கு தெரிவார். இவருக்கு இரு வேடங்கள்// மதுரையில் ஒரு வேடம். சென்னையில் ஒரு வேடம்/ அதை நீங்கள் படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

நாயகி ரேஷ்மா வெங்கடேஷ் சிரிப்பழகி. இவரின் சிரிப்புக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை. பின் நாயகனை கேட்க வேண்டுமா ? வழக்கமான காதல்.  நாயகிக்கு சிறந்த எதிர்காலம் தமிழ் திரையுலகில் காத்திருக்கிறது என்பது நமது கணிப்பு.

மன்சூர் அலிகான் அனைத்துக் காட்சிகளிலும் சாப்பிட்டுக் கொண்டே வசனம் பேசும் மனிதர். அதே அலட்டல். அதை தலை ஆட்டல். அதை சிரிப்பு. தன் பணியை சிறப்பாக செய்வதில் இவர் வல்லவர் என்பது படம் பார்ப்பவர்களுக்கு தெரியும்.

நாயகனின் நண்பனாக வரும் நகைச்சுவை நாயகன் நகைச்சுவை என்ற பெயரில் நம்மை கொள்கிறார். கடி ஜோக்குகளும் துணுக்குகளும் ஓவர் ஆக்டிங்கும். காமெடி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார் போல. காமெடிக்கு முதலில் “டைமிங்”. வேண்டும். அது தெரியாமல் எந்த நகைச்சுவை வசனமும் எடுபடாது என்பதை இவருக்கு யாராவது சொல்லி புரிய வைக்க வேண்டுகிறேன்.

இயக்குனர் முரளி கிரிஷ். இவருக்கு இது முதல் படம். நகைச்சுவை படம் எடுக்கும் இயக்குனர் ராஜேஷின் உதவியாளர் என்பதால் படத்தை நகைச்சுவை பாணியில் கொண்டு செல்ல மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார். இவருக்கு நகைச்சுவை நடிகர்கள் ஒத்துழைப்பு தந்தால் இவரது நகைச்சுவை எடுபடும் என்பது நமது கருத்து.

முதல் படம் என்பதால் புதுமையாக ஏதாவது செய்ய வேண்டும் எண்ணத்தில் பல்சருக்குள் இறந்த  காளை மாட்டின் ஆவியை செலுத்தி சில விஷயங்களை சொல்ல வருகிறார்.

ஜல்லிக்கட்டு நாம் கேள்விப்பட்டிருப்போம். அதற்குள் இருக்கும் ஜாதி பிரச்சனையை நாம் கேள்விப்பட்டிருக்க மாட்டோம். அதை அழகாக கதைக்குள் சொருகி பல்சருக்குள் பேய் வரவழைத்து பார்க்கும் ரசிகனை ஒரு திகிலுடன் பார்க்க வைத்து தான் முதல் படைப்பை வெற்றிப் படைப்பாக ஆக்க மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது நமக்கு தெரிகிறது. படத்தின் வெற்றியை பற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

கருப்பு பல்சர் – புதிய முயற்சி