
லாக்டவுன் – விமர்சனம்
அனுபமா பரமேஸ்வரன், சார்லி, நிரோஷா, பிரியா வெங்கட், லிவிங்ஸ்டன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்துள்ள படம் லாக்டவுன். படம் என்ன சொல்ல வருகிறது ?
அனுபமா பரமேஸ்வரன் ஒரு மிடில் கிளாஸ் குடும்பத்தில் வேலை தேடிக் கொண்டிருக்கும் ஒரு எதார்த்த நாயகி. வேலைக்காக பல கம்பெனிகள் ஏறி இறங்கி கொண்டிருக்கும் இவருக்கு தன் தோழி மூலம் ஒரு பார்ட்டிக்கு செல்ல, அங்கு வற்புறுத்தி மது அருந்த வைக்கிறார்கள். போதை மயக்கத்தில் இவர் கற்ப்பு பறி போகிறது. யார் என்கிற காரணம் தெரியவில்லை. வீட்டிற்கு தெரிந்தால் அவமானம்.. என்ன செய்வது என்று தெரியாமல் கருவை கலைக்க அவர் போராடும் போராட்டத்தின் வெளிப்பாடு இந்த லாக்டவுன்.
அனுபமா பரமேஸ்வரன் படத்தின் நாயகியும் இவரே. நாயகனும் இவரே.. இவரின் பண்பட்ட நடிப்பால் தன் கதாபாத்திரத்தை மிகச் சிறப்பாக செய்திருக்கிறார். தான் கர்ப்பமான விஷயம் தெரியாமல் அவர் டாக்டரிடம் சண்டை போடுவதும் சரி, தன் கற்பை கலைக்க காலில் விழுந்து கெஞ்சுவதிலும் சரி, மாறுபட்ட நடிப்பை மிக சிறப்பாக செய்திருக்கிறார். தன் கர்ப்பத்தை கலைக்க 30,000 கேட்கும் டாக்டரிடம் 20,000 கொடுத்துவிட்டு 10,000த்தை எடுத்து வருவதற்குள் டாக்டருக்கு கொரோனா வந்து மரணம் அடைய, என்ன செய்வது என்று தெரியாமல் இவர் படும் பாடு அதை அனுபவித்தார்களக்கு மட்டுமே தெரியும்.
கொரோனா காலத்தில் முடியாத விஷயத்தை எப்படி எல்லாம் முடிக்க முடியும் என்ற எண்ணத்தில், நாயகி தன் கர்ப்பத்தை கலைக்க, மீண்டும் தன் கற்பையை பறி கொடுக்கிறார். ஒரு முழு படத்தையும் தன் தோளில் சுமந்து செல்லும் அனுபமா பரமேஸ்வரன் பார்க்கும் ரசிகனிடம் பரிதாபத்தை உண்டாக்குவதில் வெற்றி பெற்று இருக்கிறார் என்பது படம் பார்க்கும் ரசிகன் ஒவ்வொருவருக்கும் புரியும்.
பருவ வயதில் பெற்றோர் பாதுகாப்பில் இருப்பதே பெண்களுக்கு சிறந்தது என்பதை படத்தை இயக்கி இருக்கும் இயக்குனர் நமக்கு தெளிவாக சொல்ல வருகிறார்.
பெற்றோரின் பேச்சைக் கேட்காமல் கேளிக்கை என்ற பெயரில் சுற்றிக் கொண்டிருக்கும் பெண்களுக்கு இந்த படம் ஒரு சாட்டையடி.
லாக்டவுன் – பருவபெண்களுக்கு
