Logo & Emblem for India’s first ever Track Asia Cup 2026 cycling event launched
இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் ட்ராக் ஏசியா கப் 2026 ( TRACK ASIA CUP 2026) சைக்கிளிங் போட்டிற்கான இலச்சினை (லோகோ) & சின்னம் வெளியீடு
![]()
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை சென்னையில் அமைந்துள்ள தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழக வளாகத்தில் ட்ராக் ஏசியா கப் 2026 ( TRACK ASIA CUP 2026) ஆம் ஆண்டிற்கான சர்வதேச சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.

இது தொடர்பாக சென்னையில் பிரத்யேக பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் டாக்டர் அதுல்யமிஸ்ரா ஐ ஏ எஸ் (கூடுதல் தலைமை செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை), திரு. ஜே மேகநாதன் ரெட்டி ஐ ஏ எஸ் ( SDAT உறுப்பினர் – செயலாளர்) , திரு
மணீந்தர் பால் சிங் ( பொதுச்செயலாளர் CFI), திரு. எம். சுதாகர் ( தமிழ்நாடு சைக்கிளிங் சங்கத் தலைவர்) ஆகியோர் கலந்து கொண்டனர்.
![]()
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 29 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு துறை பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள சைக்கிளிங் போட்டிக்கான சர்வதேச தரத்திலான தடகளத்தில் ட்ராக் ஏசியா கப் 2026 ( TRACK ASIA CUP 2026) ஆம் ஆண்டிற்கான சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது.
![]()
இந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழகத்தில் முதல் முறையாக ட்ராக் ஏசியா கோப்பைக்கான சைக்கிளிங் போட்டி நடைபெறுகிறது. இது நம் அனைவருக்கும் பெருமிதமான தருணம்.
இந்த சைக்கிளிங் போட்டியில் இந்தியா, ஹாங்காங் , ஈரான், மலேசியா சீனா இந்தோனேசியா, கஜகஸ்தான், நேபாளம், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், உஸ்பெகிஸ்தான், தாய்லாந்து , சிங்கப்பூர், இலங்கை மற்றும் சீனா தைபே ஆகிய 15 நாடுகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் கலந்து கொள்கிறார்கள். மேலும் இந்த விளையாட்டுப் போட்டியில் 30 அதிகாரிகள் – 60 தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள்.
![]()
இந்தியாவில் முதன்முறையாக சைக்கிளிங் போட்டியில் சர்வதேச அளவிலான ட்ராக் ஏசியா கப் 2026 ஆண்டிற்கான போட்டி தமிழகத்தில் நடைபெறுவது தமிழகத்திற்கு பெருமிதமான தருணம் ஆகும்.
![]()
இந்த சந்திப்பில் ட்ராக் ஏசியா கப் ( TRACK ASIA CUP 2026) போட்டிக்கான இலச்சினை (லோகோ)யும், ‘தீரன்’ எனும் பிரத்யேக சின்னமும் அறிமுகப்படுத்தப்பட்டது.
