இரவின் விழிகள் – விமர்சனம்

 

காட்டுக்குள் வரும் நபர்களை கொலை செய்யும் சைக்கோ ஏன் கொலை செய்கிறான் என்பது படத்தின் கதை ?

அண்ணன் தங்கை பாசம், தங்கைக்கு யூட்யூபில் மோகம், யூடியூபில் விமர்சிக்கும் ஒரு நபர்.. அவரும் youtuber சில விமர்சனங்களுக்கு உட்பட அவர் இவரை கிராபிக்ஸ் மூலம் பலான வீடியோவை பதிவேற்றம் செய்து அவமானப்படுத்த அதனால் தற்கொலை செய்து கொள்கிறாள் தங்கை. அதற்கு பழி வாங்கல் தான் மேலே சொன்ன நமது வார்த்தைகள். பிறகு நடப்பது என்ன பாருங்கள் இரவின் விழிகள்.

- Advertisement -

படத்தின் நாயகன் படம் முழுவதும் சிப்ஸ் பாக்கெட் சாப்பிட்டுக்கொண்டு காமெடி என்ற பெயரில் நம்மை வாட்டி வதைத்து வருகிறார்.  உடன் வரும் நாயகி கவர்ச்சியால் நம் சலிப்பை கொஞ்சம் சிறப்பாக்கி படத்தை பார்ப்பதற்கு வழி வகுக்கிறார்.

சிசர் மனோகர், சேரன் ராஜ், இன்ஸ்பெக்டர் ஏட்டு இருவரின் கதாபாத்திரங்களுக்கு அவர்களே வசனம் பேசியது போல் இருக்கிறது. என்ன பேசுகிறோம் என்று தெரியாமல் பேசிக் கொண்டிருக்கின்றனர். பேசி நம்மைக் கொல்கின்றனர்.

கௌரவத் தோற்றமாக நிழல்கள் ரவி. அவர் பாத்திரம் அவருக்கேற்ற நடிப்பு சிறப்பு.

அண்ணனாக நடித்திருக்கும் இயக்குனர் நடிப்பில் சிறப்பு.  தங்கையிடம் பாசம் காட்டுவதும் அவள் இறந்தபின் அதற்காக வருத்தப்படுவதும் என பலவித பரிமாணங்கள். இறுதிக்காட்சியில் அவரின் வசனங்கள் எதிர்காலத்தை தொலைத்துக் கொண்டிருக்கும் சிலருக்கு சவுக்கடிகள்.

படம் சொல்ல வரும் கருத்தும் என்னவென்றால் சோசியல் மீடியா எனப்படும் youtube, instagram, whatsapp இதன் மூலம் தங்களை பிரபலப்படுத்திக் கொண்டு வரும் நபர்கள், அதனால் பணம் ஈட்டும் நபர்கள், அதற்காக இவர்கள் செய்யும் செயல்கள், இதனால் ஏற்படும் பிரச்சனைகள், அந்தப் பிரச்சினையினால் பாதிக்கப்படும் நபர்கள், அதனால் தங்கள் வாழ்க்கையை தொலைக்கும் சிலர்கள் இதை மையமாக்கி திரைக்கதை அமைத்து இயக்கி இருக்கிறார் இயக்குனர் சிக்கல் ராஜேஷ். சொல்லவரும் கருத்து சமுதாயத்துக்கு சிறந்த கருத்து என்றாலும் அதை சொல்லிய விதத்தில் கொஞ்சம் தொய்வு. என்றாலும் நமது வாழ்த்துக்கள்.

இரவின் விழிகள்- சோசியல் மீடியாவின் கண்கள்