
Friday ; விமர்சனம்
மைம் கோபி, தீனா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க பல அறிமுக நட்சத்திரங்களுடன் வரும் ஃப்ரைடே வரவிருக்கும் படம் ‘ஃப்ரைடே’
படம் என்ன சொல்ல வருகிறது ?
நாம் பல படங்களில் பார்த்து ரசித்து வியந்து பார்த்த படங்களின் கூலிப்படை கதைதான் இப்படமும்.
ஆனால் அதை எப்படி சொல்லி இருக்கிறார்கள் என்பதில் தான் இந்த படத்தின் சுவாரஸ்யமே இருக்கிறது..
மைம் கோபி ஊரில் பெரிய மனிதர். ரவுடியிசத்தின் தலைவர். அரசியல் பிரமுகர். அவருக்கு அடியாள் வேலை செய்யும் படத்தின் நாயகன். தன் அரசியல் வாழ்க்கைக்கு இடையூறாக இருக்கும் எதிராளியை கொல்லச் சொல்லும் மைம் கோபி.. ஆனால் அதை நாயகன் ஏற்க மறுக்க வேறு ஒருவனை வைத்து அந்த கொலையை மைம் கோபி திட்டமிடுகிறார்.
அந்தக் கொலையில் நாயகனின் தம்பி சம்பந்தப்பட்டு எதிராளிகள் மூலம் சுடப்பட்டு இறக்க, இது ஒரு புறம் இருக்க அதே நேரம் அரசியல்வாதி கொலையுண்ட அதே இடத்தில் தீனாவின் தாயும் கொலை செய்யப்பட, தன் தாயின் கொலைக்கு பழிவாங்க நாயகனிடமே அடியாளாக வேலைக்கு சேர்ந்து அவரைக் கொல்ல முயற்சிக்கிறார் தீனா. இறுதியில் என்ன நடக்கிறது ? இதுவே Friday படத்தின் கதை.
நாயகன் அனீஸ் மாசிலாமணி அறிமுக நாயகன் போல் இல்லாமல் பல படங்களில் நடித்து பெயர் பெற்றவர் போல் இந்த படத்தில் அவர் நடிப்பு இருக்கிறது. அவரின் தோற்றமும் உடல் மொழி, வசன மொழி அனைத்தும் கூலிப்படைக்கு ஏற்றார்போல் இருக்கிறது, தமிழ் சினிமாவில் இவருக்கு சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்பது நமது அசைக்க முடியாத நம்பிக்கை.
தீனா தாயைக் கொன்றவனை பழிவாங்க துடிக்கும் கதாபாத்திரம். வழக்கமாக தீனா என்றால் ஒரு நகைச்சுவை சுற்றி இருக்கும். ஆனால் இந்தப் படத்தில் தீனா ஒரு புதிய பரிமாணத்தில் தன் நடிப்பை வழங்கி இருக்கிறார். எந்த ஒரு தேவையில்லாத வசனமும் தேவையற்ற உடல் மொழியும் இல்லாமல் அந்த கதாபாத்திரத்துக்கு என்ன தேவையோ அதை அளவோடு அழகாக செதுக்கியிருக்கிறார் தன் நடிப்பால்.
மைம் கோபியைப் பற்றி நம் சொல்ல வேண்டியது இல்லை. எந்த பாத்திரமும் இவருக்கு பொருந்தும் என்பது நாம் அறிந்த விஷயம். அதேபோல் இந்த கதாபாத்திரமும் அவருக்கு சிறப்பு செய்திருக்கிறது. மற்ற நடிகர்கள் அனைவரும் தங்கள் பங்களிப்பை மிகச் சிறப்பாக வழங்கி இருக்கின்றனர்.
கதை, இயக்கம் ஹரி வெங்கடேஷ்.. கதைக்குள் கதை, அந்தக் கதைக்குள் கதை என ஒரு திரில்லான கதையை நமக்கு சிறப்பாக செதுக்கி காட்சிக்கு காட்சி நம்மை ஒரு எதிர்பார்ப்புடன் எடுத்துச் செல்கிறார்.
அவருடன் துணை நிற்கும் ஒளிப்பதிவாளர் ஜானி நாஷ். இவரை நாம் பாராட்டியாக வேண்டும். கதையை எந்த அளவுக்கு இயக்குனர் செதுக்கி சிறப்பு செய்தாரோ அந்த அளவுக்கு ஒளிப்பதிவாளரும் தன் பங்களிப்பை மிகச் சிறப்பாக செய்து இருக்கிறார். காட்சிக்கு காட்சி மிக அழகாக இவரின் கேமரா படம் பிடித்து இருக்கிறது. அவருக்கு துணையாக இசையமைப்பாளர் டுமே பின்னணி இசை நம்மை எப்போதும் ஒரு பரபரப்புடன் வைத்திருக்கிறார். தேவையில்லாத இரைச்சல் இல்லாத இசையை தேவையான அளவுக்கு வழங்கி இருக்கிறார்.
Friday – good day
திரைப்படக் குழுவினர்
நடிகர்கள்:-
மைம் கோபி, KPY தீனா, அனிஷ் மாசிலாமணி, ராமச்சந்திர துரைராஜ், கலையரசன் (Driver Jamuna), சித்ராசேனன் (Manjumal Boys), சித்து குமரேசன் (Thangalaan, Yaathisai)
படக்குழுவினர்:-
தயாரிப்பாளர் – அனிஷ் மசிலாமணி
கதை & இயக்கம் – ஹரிவெங்கடேஷ்
ஒளிப்பதிவு – ஜானி நாஷ்
இசை – டுமே
படத்தொகுப்பு – பிரவீன் M
கலை – கார்த்தி லோகா
சண்டைக் காட்சிகள் – அபினாஷ் ஆதி
ஒலி கலவை – பிஜூ ஆண்டனி
வண்ணமயமாக்கல் – பிரேம் குமார் G
ஒப்பனை – நீலா ஜீவன்
விளம்பர வடிவமைப்பு – அப்யஜித் வீரா
மக்கள் தொடர்பு – திரு
தயாரிப்பு நிறுவனம் – Dakdam Motion Pictures
விநியோகம் – ஷிவானி ஸ்டூடியோஸ் , செந்தில்.
