
தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில் சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான விருதை வென்ற ‘தி வைல்ட் கால்’
இந்தநிலையில் இந்திய சினிமாவின் தந்தை என அழைக்கப்படும் தாதாசாகேப் பால்கே பெயரில் நடைபெற்று வரும் இந்தியாவின் மிகவும் மதிப்புமிக்க சுயாதீன திரைப்பட விழாக்களில் ஒன்றான 2026-ஆம் ஆண்டுக்கான தாதாசாகேப் பால்கே திரைப்பட விழாவில், ‘தி வைல்ட் கால்’ (The Wild Call). திரைப்படம் “சிறந்த அனிமேஷன் திரைப்படத்திற்கான” விருதை வென்றுள்ளது.
.
லைட்ஸ் ஆன் மீடியாவின் அனிமேஷன் பணி வெங்கி சந்திரசேகர் தலைமையில் உருவாக்கப்பட்டது , மற்றும் இந்த படத்திற்கான post production பணிகளையும் lightson media நிறுவனமே செய்துள்ளது , இவர்களோடு இணைந்து ஜிப்ரான் வைபோதாவின் இசையில் நேர்த்தியாக உருவாக்கப்பட்டு இருந்தது..
இத்திரைப்படம் சிங்கம் மற்றும் புலிக்குட்டிகள் இந்தியாவின் பல்லுயிர் பெருக்க மையங்களான இந்தியப் பெருங்கடல், மேற்குத் தொடர்ச்சி மலைகள், இமயமலை மற்றும் தார் பாலைவனம் வழியாகப் பயணிப்பதைப் பின்தொடர்கிறது.
மேலும் இந்திய யானை மற்றும் பெருங்குருவி உட்பட 23 குறிப்பிடத்தக்க உயிரினங்களை பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்துவதோடு, பாதுகாப்பு, காலநிலை நடவடிக்கை, வாழ்விடப் பாதுகாப்பு மற்றும் மனித-வனவிலங்கு சகவாழ்வு குறித்த முக்கிய செய்திகளையும் வழங்குகிறது.
பாட்னாவின் ஆர்.சி.சி.எஃப் கோபால் சிங், ஐ.எஃப்.எஸ் மற்றும் ராஜ்கிர் உயிரியல் பூங்கா சஃபாரியின் இயக்குநர் ராம் சுந்தர், ஐ.எஃப்.எஸ் ஆகியோரின் படைப்பு வழிகாட்டுதலுடன் இது உருவாகியுள்ளது.