ரெட்ட தல ; விமர்சனப்

மான் கராத்தே, கெத்து திரைப்படங்களை தொடர்ந்து கிரிஷ் திருக்குமரன் இயக்கியிருக்கும் படம் ரெட்ட தல.

அருண் விஜய், சித்தி இத்னானி, தான்யா ரவிச்சந்திரன், ஜான் விஜய், ஹரீஷ் பெராடி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ரெட்ட தல.

படம் என்ன சொல்ல வருகிறது ?

- Advertisement -

பாண்டிச்சேரியில் அனாதையாக இருக்கும் சிறுவயது அருண் விஜய்க்கு சிறுவயது சித்தி இத்னானியின் நட்பு அவரை சந்தோஷப்படுத்துகிறது. ஏதோ காரணத்தினால் பிரிந்த இருவரும் பல வருடங்களுக்குப் பிறகு சந்திக்கின்றனர். தன் காதலை சொல்லி தன்னை திருமணம் செய்யும்படி சித்தி இத்னானி இடம் அருண் விஜய் கூற பணம் ஒன்றையே பெரிதாக கருதும் சித்தி இத்னானி திருமணத்துக்கு தடை சொல்கிறார்.

விரக்தியில் பாண்டிச்சேரி ரோட்டில் நடந்து செல்லும் அருண் விஜய் மீது ஒரு கார் மோதுகிறது காரை ஒட்டியவர் அருண் விஜய்யை போல இருக்கும் இன்னொரு அருண் விஜய். அவர் மிகப்பெரிய கோடீஸ்வரன் இருவரும் நண்பர்களாக, தன் கிரெடிட் கார்டு, கார் மற்றும் தன் உருவ மாற்றத்தையும் அவருக்கு அளித்து காதலியுடன் ஒரு நாள் சந்தோஷமாக இரு என்று கூறி அனுப்புகிறார்.

விஷயத்தை அறிந்த சித்தி இத்னானி கோடீஸ்வரன் அருண் விஜய்யை கொலை செய்து அந்த இடத்திற்கு நீ வந்தால் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என்று சொல்ல, காதலி சொல்லை தட்டாத காதலன் கோடீஸ்வரனை சுட்டு கொலை செய்கிறான். பிறகு தான் தெரிகிறது அவன் பரோலில் வந்திருக்கும் ஒரு கொலை குற்றவாளி என்று பிறகு என்ன ? இதுவே ரெட்ட தல படத்தின் கதை.

அருண் விஜய்.. வரவர இவரை பார்த்தால் ஒரு ஹாலிவுட் ஹீரோ போல் தெரிகிறார். இவரின் பாடி லாங்குவேஜ், ஒப்பனை மற்றும் கதாபாத்திரத்தை உள்வாங்கும் தன்மை அனைத்தும் மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்.

இரண்டு கதாபாத்திரங்கள்.. இரண்டுக்கும் என்ன பெரிய வேற்றுமை காட்டி விட முடியும்.. ஆனால் இவர் காட்டுகிறார். தன் காதலியின் சொல்லை கேட்டு கொலை செய்த பிறகு கோடீஸ்வரனுக்கு ஒரு கால் இல்லை என்பதை அறிந்தவுடன் இவரின் முகபாவம் மிக அருமை. கோடீஸ்வரன் ஒரு கொலை குற்றவாளி என்று தெரிந்தவுடன் இவர் படும் அவஸ்தை அட அட அட அட..

உண்மையைச் சொன்னால் கொலை செய்த குற்றம்.. சொல்லாவிட்டாலும் கொலைகாரன்.. மத்தளத்தின் இரு தோள்கள் அடி வாங்குவது போல் இவரின் பிரச்சனை.

சண்டைக் காட்சிகளில் ஒரு ஆக்சன் ஹீரோவை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறார். அதேசமயம் காதலிக்காக காதலுக்காக இவர் படும் வேதனை நடிப்பின் சிறப்பு. முன்னணி நாயகர்கள் வரிசையில் இடம் பிடிக்க முன்னேறிக் கொண்டிருக்கும் அருண் விஜய்க்கு நமது வாழ்த்துக்கள்.

அடுத்து சித்தி இத்னானி. இவரைப் பார்த்தால் “ஜானி. படத்தின் தீபாவின் கதாபாத்திரத்தை ஞாபகப்படுத்துகிறது. பணம் ஒன்றே இவரின் குறிக்கோள். பணத்திற்காக இவர் செய்யும் செயல்கள் ரசிகர்களுக்கு இவர் மேல் கோபத்தை உண்டாக்குகிறது. அதுவே இந்த கதாபாத்திரத்தின் வெற்றி. முக பாவங்களில் எதார்த்தத்தின் இனிமையான வெளிப்பாடுகள். எந்த ஒரு இடத்திலும் மிகைப்படுத்தாமல் அந்தக் கதாபாத்திரத்தின் தன்மை மாறாமல் மிக அழகாக செய்து இருக்கிறார்.

தான்யா ரவிச்சந்திரன் இந்த கதாபாத்திரத்துக்கு இவர் தேவையா என்பதே நமது கேள்வி. அதனால் இவரைப் பற்றி விமர்சிப்பது தேவையில்லை.

காவல்துறை அதிகாரியாக வரும் ஜான் விஜய். இவருக்கு நடிப்பென்றால் கத்திக்கொண்டு, சிரித்துக் கொண்டு, உடம்பை வளைத்துக் கொண்டு இருக்க வேண்டும். வருங்கால இயக்குனர்கள் இவரை செம்மைப்படுத்தி, சீர்படுத்தி மற்ற கதாபாத்திரங்களை இவருக்கு அளித்தால் பார்ப்பவர்களுக்கு வெறுப்பு வராமல் இருக்கும்.

பல வருடங்களுக்குப் பிறகு இயக்குனர் இந்த கதையை எடுத்து சிறப்பாக திரைக்கதை அமைத்து காட்சிக்கு காட்சி ஒரு எதிர்பார்ப்பு உடன் அதே சமயம் பரபரப்புடன் நம்மை வைத்து உள்ளார்

க்ளைமாக்சில் அருண் விஜப் யார் என்பதை தெரியப்படுத்தும் காட்சி பார்க்கும் ரசிகர்கள் யாரும் எதிர்பார்க்காத காட்சி சிறப்பு.

ரெட்ட தல- அடுத்த ‘தல’யாக உருவெடுக்கும் அருண் விஜய்

 

ரேட்டிங் – 3 / 5