ரேகை (வெப்சீரிஸ்) ; விமர்சனம்

 

பாலஹாசன், பவித்ரா ஜனனி, அஞ்சலி ராவ், வினோதினி வைத்தியநாதன் ஆகியோரின் நடிப்பில் வெளிவந்திருக்கும் வெப்சீரிஸ் ரேகை. இன்று முதல் z5 ஒரிஜினலில் ஒளிபரப்பாகும் வலைத்தொடர் ஆகும். ரேகை என்ன சொல்ல வருகிறது ?

வரிசையாக நான்கு விபத்தில் நான்கு மரணங்கள். மரணம் அடைந்த நால்வருக்கும் கை ரேகை ஒரே மாதிரியாக இருக்கிறது. எப்படி இந்த நான்கு விபத்துகளும் விபத்து அல்ல, கொலைகள்.. அது எப்படி,? அதை கண்டுபிடிக்க இறங்கும் ஒரு காவல்துறை அதிகாரி. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒவ்வொரு எதிர்பாராத திருப்பங்கள். காட்சிக்கு காட்சி நம்மை என்ன? என்ன? என்று எதிர்பார்க்க வைக்கும் கதை. விறுவிறுப்பான திரைக்கதை..

- Advertisement -

இயக்குனர் தினகரன் இயக்கம் சிறப்பு. அவருடன் பயணிக்கும் ஒளிப்பதிவாளர் மகேந்திரா ஹென்றி மிகச்சிறப்பான ஒளிப்பதிவை சிறப்பான கோணத்தில் நமக்குத் தந்திருக்கிறார். இயக்குனருக்கும் ஒளிப்பதிவாளர்க்கும் மிகவும் உதவி செய்து இருக்கிறார் இசையமைப்பாளர் ராஜ் பிரதாப். கதைக்கேற்ற பின்னணி இசை.. க்ரைம் கதைக்கு ஏற்ற இசை.. எந்த ஒரு இடத்திலும் இரைச்சல் இல்லாமல் விறுவிறுப்பு மட்டுமே இசையின் வேகம் சிறப்பு..

காவல்துறை அதிகாரியாக பாலஹாசன்.. உடலை சும்மா கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார்.. காவல்துறை யூனிபார்ம் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது. விசாரணை செய்யும் தோரணையும் ஒரு ஒரிஜினல் காவல்துறை அதிகாரி போல் இருக்கிறது. அதற்குள் ஒரு சிறிய காதல்.. காதலுக்குள் ஒரு மோதல்.. அந்த மோதலுக்கு காரணம் ஒரு “குவாட்டர் ” அதைக் குடித்தவர் யார் என்பது கேள்விக்குறி மற்றும் பவித்ரா ஜனனி, அஞ்சலி வினோதினி மற்றும் பலரின் நடிப்பு சிறப்பு.

கதை க்ரைம் மன்னன் ராஜேஷ் குமார் என்ற பெயரைப் பார்த்ததும் கண்ணை மூடிக்கொண்டு, மன்னிக்கவும்.. கண்ணை திறந்து கொண்டு மிக நம்பிக்கையோடு இந்த வலைத் தொடரை நாம் காணலாம். நம்மோடு எதிர்பார்ப்பு அனைத்தையும் பூர்த்தி செய்யும் ஒரு சிறந்த கிரைம் வலைத்தொடர் ரேகை. இதில் எந்த மாற்றமும் இல்லை. கேரண்டிக்கு நாங்கள் உறுதி என்று கூறுகிறது Zee5 ஒரிஜினல்.

ரேட்டிங் – 4 / 5