ராம் அண்ட் லீலா – திரை விமர்சனம்:

 

நடிகர்கள்:ரியோ ராஜ், வர்த்திகா, சேத்தன், முனீஷ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், பாலாஜி, தாஃபியா, கவின் மற்றும் பலர் நடிப்பில்
வந்திருக்கும் படம்

தொடர்ந்து காதல் தோல்விகளை சந்தித்து விரக்தியில் இருக்கும் ராம், ஒரு ரயில் பயணத்தில் லீலாவை பார்க்கிறான். முதல் பார்வையிலேயே காதல் மலர, இருவரின் வாழ்க்கையும் கலர்ஃபுல்லாக மாறுகிறது. காதல் ஆழமாகும் போது லீலா ஒரு விசித்திரமான கண்டிஷன் போடுகிறாள் – சாயங்காலம் 6 மணிக்கு மேல் தன்னை பார்க்கக் கூடாது என்று. இந்த 6 மணி ரகசியத்துக்கு பின்னால் என்ன மர்மம் இருக்கு? லீலாவின் உண்மையான பின்னணி என்ன? ராம் அந்த மர்மத்தை கண்டுபிடித்து காதலில் ஜெயித்தானா? என்பதை காதல், காமெடி, த்ரில்லர் கலந்து சொல்கிறது படம்.

- Advertisement -

ரியோ ராஜ்: தன்னுடைய இயல்பான காமெடி டைமிங் மற்றும் அப்பாவி முக பாவனைகளால் ராம் கதாபாத்திரத்தில் அசத்தியிருக்கிறார். இளமையும், மாடர்ன் லுக்கும் அவருக்கு பக்காவாக பொருந்துகிறது. காதல் காட்சிகளிலும், பதட்டமான காட்சிகளிலும் உணர்வுகளை அழகாக வெளிப்படுத்தி ரசிக்க வைக்கிறார்.

வர்த்திகா: அறிமுக நாயகியாக இருந்தாலும், ரொமான்ஸ், அழகு இரண்டையும் கலந்து மனதை கவர்கிறார். பேசும் கண்களாலேயே காதலை கடத்துகிறார். கதையின் முக்கிய பிடியான கதாபாத்திரத்தை முழு அர்ப்பணிப்புடன் செய்து அனைவரின் கவனத்தையும் ஈர்க்கிறார்.

சேத்தன், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட் மூவரும் தங்கள் அனுபவ நடிப்பால் படத்துக்கு பலம் சேர்த்துள்ளனர். முனீஷ்காந்த் – மாபாஃபா ஆனந்த் காமெடி கூட்டணி படம் முழுக்க சிரிப்பை அள்ளித் தெளிக்கிறது. பாலாஜி, தாஃபியா, கவின் ஆகியோரும் கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தியுள்ளனர்

ஒளிப்பதிவாளர் மல்லிகார்ஜுன் ஒவ்வொரு ஃபிரேமையும் ரசனையோடு, வித்தியாசமான கோணங்களில் அழகாக படம்பிடித்துள்ளார். அங்கித் மேனனின் இசையில் மெலடியும், பின்னணி இசையும் கதையின் மர்மத்துக்கு ஏற்றபடி பயணித்து மனதை மயக்குகிறது. எடிட்டர் சிவா படத்தை எங்கும் தொய்வு இல்லாமல் விறுவிறுப்பாக கொண்டு சென்றுள்ளார்.

இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன், காதல் + கிரைம் + சைக்கலாஜிக்கல் த்ரில்லர் என மூன்றையும் கலந்து ஒரு ஜனரஞ்சகமான திரைக்கதையை கொடுத்துள்ளார். தன் கற்பனை கதையை திரையில் தெளிவாக கொண்டு வந்திருப்பது பாராட்டுக்குரியது.

‘ராம் அண்ட் லீலா’ – காதல், மர்மம், காமெடி மூன்றும் கலந்த குடும்பத்தோடு பார்க்கக்கூடிய ஒரு நல்ல டைம்பாஸ் படம்!

ரேட்டிங் – 3/5