குமார சம்பவம் – விமர்சனம்

பாலாஜி வேணுகோபாலின் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் குமார சம்பவம். படம் என்ன சொல்ல வருகிறது ?

சென்னையில் மிகப்பெரிய வீட்டில் வசித்து வரும் நாயகன் சினிமாவின் இயக்குனராக வேண்டும் என்று ஆசை. அதற்காக வீட்டை விட்டு பணம் தர சொல்லி தன் தாத்தாவிடம் கேட்கிறார். தாத்தாவும் உயிலை எழுதி வைத்துவிட்டு இறந்து விடுகிறார்.

இந்நிலையில் வீடு விற்கும் முயற்சியில் இருக்கும்போது அவர் வீட்டில் வாடகைக்கு இருக்கும் சமூக சேவகர் குமாரவேல் மர்மமான முறையில் இருந்து கிடக்க, அது கொலையாக இருக்கலாம் என்ற எண்ணத்தில் விசாரணைக்கு நாயகனை உட்படுத்துகிறார்கள். குமாரவேல் எப்படி இருந்தார் வீடு விற்கப்பட்டதா ? நாயகன் தன் சினிமாவை இயக்கினாரா என்பதே மீதி கதை.

- Advertisement -

நாயகன் குமரன் தங்கராஜனுக்கு திரையுலகில் முதல் நாயகன் வாய்ப்பு. அதை சிறப்பாக செய்து இருக்கிறார். அதுவும் அலம்பல் இல்லாமல் ஒரு நகைச்சுவையாக  குமாரவேலை யார் கொலை செய்திருப்பார்கள் என்று ஒரு பட்டியலிட்டு அதில் ஒரு மூன்று பேரை இவர்கள் மறைமுகமாக ஒரு ஜூனியர் ஆர்டிஸ்ட்டை சிபிஐ ஆபீஸராக மாற்றி விசாரிக்கும் முறை நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறார்கள். பால சரவணன் ஒரு ரியல் எஸ்டேட் புரோக்கராக நம்மை சிரிக்க வைக்கிறார்.

சமூக சேவகராக வரும் குமாரவேல் கதாபாத்திரம் நமக்கு ‘டிராபிக் ராமசாமியை” ஞாபகப்படுத்துகிறது. ஒரு போராளியின் அலட்டல் இல்லாத ஆர்ப்பாட்டம் இல்லாத அமைதியான நடிப்பால் குமரவேல் மீண்டும் தான் ஒரு சிறந்த நடிகன் என்பதை நிரூபித்திருக்கிறார். மேஜர் சுந்தரராஜனின் மகன் அவரின் வக்கீலாக வருகிறார். மற்றும் ஜிஎம் குமார் தன் அனுபவ நடிப்பால் அசத்துகிறார். மற்ற கதாபாத்திரங்களும் சிறப்பு செய்திருக்கிறார்கள்.

நகைச்சுவை மட்டுமே எங்களுக்கு முக்கியம் என்பதை முன்னிறுத்தி இயக்குனர் பாலாஜி வேணுகோபால் திரைக்கதையை வடிவமைத்து படத்திற்கு எந்த இடத்திலும் தொய்வு ஏற்படாமல் சிறப்பாக இயக்கி இருக்கிறார். அதிலும் ஒரு சஸ்பென்ஸ், ஒரு எதிர்பார்ப்பு, இறுதியில் அந்த சஸ்பென்ஸ் தெரிந்தவுடன் நமக்கு ஷாக்.. பிறகு சிரிப்பு..

குமார சம்பவம் – சிரிப்புக்கு உத்தரவாதம்