
கிட்டி – விமர்சனம்
அசோக் (விஜய்), சங்கவி, நிஷா, சிமு அத்வானி, யுகன், ஒய்.ஜி.மகேந்திரன்மற்றும் பலர் நடிப்பில காதர் இசையில்
வி.எஸ்.வேலன் ஒளிப்பதிவில்
வரும் படம் கிட்டி படம் என்ன சொல்ல வருகிறது
விஜய் (அசோக்) போலீஸ் ஸ்டேஷனுக்கு தானாகவே வந்து சரணடைகிறார். “நான் என் காதலி பூஜாவை கொன்றுவிட்டேன், என்னை கொல்ல வந்த ஒருவனையும் கொன்றுவிட்டேன்” என்று இரண்டு கொலைகளை தானே ஒப்புக்கொள்கிறார்.
ஆனால் போலீஸ் அதிகாரி யுகன் விசாரிக்க ஆரம்பிக்கும் போது தான் தெரிகிறது, விஜய் சொல்வதில் பல லாஜிக் மீறல்கள் இருக்கின்றன என்று . விஜய் உண்மையில் யார்? பூஜா எப்படி இறந்தார்? விஜய்யை சுற்றி இருக்கும் சங்கவி, நிஷா, சிமு அத்வானி ஆகிய மூன்று பெண்களுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம்? இதுவே கிட்டியின் ஒன்லைன்
அசோக் – படத்தின் மிகப்பெரிய தூண் அசோக் தான். ஆனால் அந்த தூண் எதையும் தாங்கி பிடிக்க வில்லை.
முதல் பாதியில் படம் உங்களை உங்கள் கற்பனைக்கு அழைத்துச் செல்லும்
போலீஸ் காவல்துறை அதிகாரியாக யுகன் – சத்தம் இல்லாமல், ஸ்டைலாக விசாரணை செய்கிறார். ஒய்.ஜி.மகேந்திரன் ஜட்ஜ் ஜாக வருகிறார் மூன்று ஹீரோயின்களுக்கும் கதையில் முக்கிய திருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. அரவிந்தராஜனின் கதாபாத்திரம் சரியாக நமக்கு விளங்கவில்லை
.
ஒரு த்ரில்லர் படத்திற்கு மிக முக்கியம் தெளிவான கிளைமாக்ஸ். இங்கே கிளைமாக்ஸ் குழப்பமாக முடிகிறது. சஸ்பென்ஸுடன் தொடங்கி, குழப்பத்தில் கும்மி அடிக்கிறார்கள் . மாறா மாறா என்ற பாடல் அறிமுகப் பின்னணி பாடகர் ரித்திக் பாடியிருக்கிறார் இவர் வேறு யாரும் அல்ல காதல் மன்னன் ஜெமினி கணேசனின் கொள்ளுப்பேரன் நகைச்சுவை திலகம் ஒய் ஜி மகேந்திரன் பேரன் அரசியலில் முன்னணியில் வந்து கொண்டிருக்கும் மதுவந்தியின் மகன் ஆனால் இவரின் தனித்திறமையால் மாறா பாடலில் ரசிகனை கட்டிப்போட்டு வைத்து விடுகிறார் விரைவில் இவரின் குரல் உலகம் எங்கும் ஒலிக்கும் என்பது ஐயமில்லை
மொத்தத்தில்: கிட்டி – நல்ல கதையை திரைக்கதையால் குழப்பி மக்களை ஏமாற்றுகிறார்கள்
ரேட்டிங்-2 / 5
