
ஃபோர்த் ஃப்ளோர் – விமர்சனம் :
மும்பையிலிருந்து சென்னைக்கு வரும் ஐடி இளைஞர் ஆரி அர்ஜுனன், ஒரு அபார்ட்மென்ட்டில் நான்காவது தளத்தில் தங்கிய பிறகு அமானுஷ்ய கனவுகளாலும், மாயமான முன்னாள் காதலியின் மர்மத்தாலும் சிக்கிக்கொள்கிறார்.. கனவு – நிஜம் கலந்த இந்த திகில் கதை, திருப்பங்களுடன் நகர்கிறது.
ஆரி தனது கதாபாத்திரத்தில் உணர்ச்சி மற்றும் பதட்டத்தை நன்றாக வெளிப்படுத்துகிறார்.. வில்லனாக வரும் சுப்பிரமணிய சிவா மிரட்டலான தோற்றம் கொடுத்தாலும், அமானுஷ்ய அம்சங்கள் காரணமாக முழு தாக்கம் ஏற்படவில்லை. நாயகிகளும் துணை நடிகர்களும் தங்களது வேலையைச் சரியாக செய்துள்ளனர்.
பின்னணி இசை மற்றும் ஒளிப்பதிவு திகில் சூழலை உருவாக்க உதவுகின்றன. இயக்குநர் எல்.ஆர்.சுந்தரபாண்டியன் திகில், காதல், குடும்ப உணர்வு ஆகியவற்றை இணைத்து கதையை சுவாரஸ்யமாக சொல்ல முயற்சி செய்துள்ளார்.
மொத்தத்தில், சில இடங்களில் மெதுவாகினாலும், திருப்பங்கள் காரணமாக ‘ஃபோர்த் ஃப்ளோர்’ ஒரு பார்க்கத் தகுந்த திகில் திரில்லர்.
