
தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரி பாடத்திட்டத்தில் இயக்குநர் சீனு ராமசாமியின் கவிதை நூல்கள்!
பெருமைமிக்க தஞ்சை சரபோஜி மன்னர் கல்லூரியின் தமிழ்ப் பாடத்திட்டத்தில், திரைப்பட இயக்குநரும் கவிஞரும் எழுத்தாளருமான சீனு ராமசாமியின் கவிதை நூல்கள் இடம்பெற்றுள்ளன.
B.A. தமிழ்: ‘தயை’ — வேரல் பதிப்பகம்
M.A. தமிழ்: ‘நிலத்தவள்’ — மீ பதிப்பகம்
தமது படைப்புகளைத் தேர்வு செய்து, பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்து அங்கீகாரம் அளித்துள்ள தமிழ்ப் பேராசிரியர்கள் மற்றும் பாடத்திட்டக் குழுவினர் அனைவருக்கும் இயக்குநர் சீனு ராமசாமி தனது இதயபூர்வமான நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்துள்ளார்.