
DC – விமர்சனம்
அருண் மாதேஸ்வரன்இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ், மற்றும் வாமிகா கப்பி நடிப்பில் சன் பிக்சர்ஸ தயாரிப்பில் வந்திருக்கும் படம் D C
DC = தேவதாஸ் சந்திரா. பெயரில் காதல் இருக்கு. ஆனா படம் முழுக்க ரத்தம் தான் இருக்கு.
ஏழை விவாசாயி தன் மகனின் படிப்பு செலவுக்கு தன் விவாசாய நிலத்தை விற்ற பணத்தை
போலீஸ் பிடுங்க, அதை எதிர்து கேட்ட தேவதாஸ் ஒரு கட்டத்தில் சட்டத்துக்கு வெளியே போகிறான். ஆயுத கொள்ளை, போலீஸ் மோதல் என பெயர் கெட்டுப் போகிறது. அந்த சுழலில் அவன் சந்திப்பது தான் சந்திரா.
18 வருடம் ஒரே அறைக்குள் அடைபட்டு கிடந்தவள் அவள். வெளி உலகம் தெரியாது. சூரியன், காற்று, மனிதம் எதுவும் தெரியாது. தாஸ் அவளை காப்பாற்றி வெளியே கூட்டி வருகிறான். அங்கிருந்து ஆரம்பிக்கிறது இருவரின் தப்பிக்கும் பயணம்.
லோகேஷ் கனகராஜ் ஹீரோவாக அறிமுகம். வார்த்தைகள் குறைவு, முகத்தில் வலி அதிகம். அடி வாங்கி, ரத்தம் சிந்தி, ஆனால் உடையாத ஒரு ஆளாக பொருந்திப் போகிறார். எதிர்பார்ததை விட நல்ல முயற்சி.
வாமிகா கப்பி – படத்தின் ஆன்மா இவர்தான். 18 வருட சிறைக்கு பிறகு வெளி உலகை முதன்முதலில் பார்கும் குழந்தையின் பார்வை. “இந்த உடம்பு என்னோடது இல்ல” என்று நடக்கும் அந்த ஒரு காட்சியே போதும். டாக்டரை சுடும் இடம், கடைசி ஆவேசம் எல்லாம் நினைவில் நிற்கிறது.
பாலாஜி தேவி பிரசாத் – குடும்பத்துக்காகவும் கடமைக்காகவும் தவிக்கும் போலீஸ் அஷ்ரப். நேர்தியான நடிப்பு.
சஞ்சனா – சிறிய ரோல் என்றாலும் மனதில் நிற்கிறார்.
கிருஷ் தயாள்- வில்லத்தனமான போலீஸ் போஜராஜ்.
அருண் மாதேஸ்வரனின் கைவண்ணம் தெரிகிறது. அடி, உதை, ரத்தம் – அவரது டிரேட்மார்க் எல்லாம் இருக்கு. ஆனால் இந்த முறை அதற்கு நடுவில் ஒரு மென்மையான உறவையும் வைக்க முயன்றிருக்கிறார். தாஸ்-சந்திரா உறவு காதல் இல்லை. ஒருவருக்கொருவர் புரிந்து கொண்ட தோழமை.
அனிருத்தின் பின்னணி இசை படத்தை தூக்கி நிறுத்துகிறது. முகேஷ் ஒளிப்பதிவில் கொல்கத்தா சேரிகளும், தமிழ்நாட்டு தப்பிக்கும் பயணமும் வித்தியாசமாக இருக்கு.
போலீஸ் அராஜகம் என்ற கதை புதிதல்ல. ஆனால் அதற்குள் சந்திராவின் பார்வையில் உலகை காட்டிய இடங்கள் மட்டும் புதிதாக இருக்கு.
DC படம் வித்தியாசமான முயற்சி. வன்முறையை தாண்டி, இரண்டு உடைந்த மனிதர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக நிற்பதை சொல்ல வந்திருக்கிறது.
லோகேஷ் கனகராஜ் நடிகராகவும், வாமிகாவின் நடிப்புக்காகவும் ஒருமுறை பார்க்கலாம்.
D C .வன்முறை ரத்தம் கொலை = காதல்
ரேட்டிங் 4/5.
