
பிளாக் மெயில் – விமர்சனம்
ஜிவி பிரகாஷ், ஸ்ரீகாந்த், ரமேஷ் திலக், தேஜு அஸ்வினி, லிங்கா, பிந்து மாதவி மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் பிளாக் மெயில்
படம் என்ன சொல்ல வருகிறது. தலைப்பை பார்த்ததும் கதை என்னவென்று அனைவருக்கும் புரிந்திருக்கும். ஆனால் அது எந்த விதமான பிளாக்மெயில் என்பதே இந்த பிளாக் மெயில் கதைச்சுருக்கம்
மருந்து கம்பெனியில் வேன் டிரைவர் ஆக இருக்கும் நாயகன் ஜிவி பிரகாஷ் மெடிக்கல் ஷாப்புக்கு மருந்துகள் சப்ளை செய்யும்போது அவரின் வேன் திருடு போகிறது. அந்த வேனில் 50 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் இருப்பதாக மருந்து கிடங்கின் முதலாளி சொல்ல அதை ஜீவி பிரகாஷ் தான் எடுத்திருக்க வேண்டும் என்று சொல்ல அதை திருப்பி தராவிட்டால் அதற்குரிய பணம் 50 லட்சம் வேண்டும் இல்லை என்றால் உன் காதலி உனக்கு சொந்தமில்லை என்று தேஜு அஸ்வினியை கடத்தி விடுகிறார்
இது ஒரு புறம் மறுபக்கம் சுற்றுலாக்காக வரும் ஸ்ரீகாந்த், பிந்து மாதவி இவர்களின் குழந்தை கடத்தப்படுகிறது தேஜு. அஸ்வினியை மீட்டெடுத்தாரா ஜிவி பிரகாஷ்? ஸ்ரீகாந்தின் குழந்தை கிடைத்தா ? தெரிந்து கொள்ள பாருங்கள்.. பிளாக்மெயில்
ஜிவி பிரகாஷ் இந்த கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து அதை உள்வாங்கி மிக சிறப்பாக செய்திருக்கிறார் காதல் காட்சிகள் இல்லை என்றாலும் படம் துவக்கத்தில் காதலி கர்ப்பத்துடன் இருக்கிறார் இதன்மூலம் இவர்களின் காதல் எப்படிப்பட்டது என்பதை தெளிவாக சொல்லிவிட்டார் இயக்குனர் நண்பனாக வரும் ரமேஷ் திலக் இவரின் பக்கபலம்
தேஜு அஸ்வினிக்கு காட்சிகள் குறைவு என்றாலும் தன் கதாபாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார்
ஸ்ரீகாந்துக்கு இந்த பிளாக் மெயில் திரைப்படம் தமிழ் திரை உலகில் தன் இடத்தை மீண்டும் பிடிக்க உதவும் சிறந்த கதாபாத்திரம்
லிங்கா இவரின் மிரட்டல் எதிர்காலத்தில் விரல்விட்டு எண்ண கூடிய வில்லன்கள் வரிசையில் இடம் பெறுவார் என்பது உறுதி
இரவுக்கு ஆயிரம் கண்கள் கண்ணை நம்பாதே வெற்றி படத்தின் இயக்குனர் மு மாறன் இத்திரைப்படத்திற்கு திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார்
முந்தையபடங்களின் சாயல் இப்படத்தில் தெரிகிறது ஆனால் கதைக்களம் வேறு
ஒரு குழந்தை
ஒரு நாயகி
போதை பொருள்
பணம்
இவற்றை முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றி திரைக்கதையை விறுவிறுப்பாக வடிவமைத்து பார்க்கும் மக்கள் ரசிக்கும்படியாக இயக்கி இருக்கிறார்
.
முதல் 15 நிமிடங்களுக்குப் பிறகு வேகம் எடுக்கும் படம் இறுதி காட்சி வரை எந்த ஒரு தடையும் இல்லாமல் சிறப்பாக செல்கிறது இவரின் திரைக்கதை சொல்லும் பாணி மிக அருமை
பிளாக் மெயில் – சஸ்பென்ஸ் எக்ஸ்பிரஸ்
