ஆல்பாஸ் – திரை விமர்சனம்

ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன், மோகனா ஆர், துஷ்யந்த், ஜனனி, சரத் லோகித்ஸ்வா (MLA), விஜய் சத்யா, பிச்சைக்காரன் மூர்த்திநடிப்பில் வந்துஇருக்கும் படம் படம் என்ன சொல்ல வருகிறது

வடசென்னை சத்யா நகரில் மூன்று நடுத்தர குடும்பங்கள். ஜெயப்பிரகாஷ் – செந்தி குமாரி, சுப்பிரமணிய சிவா – வினோதினி, பிரசன்னா – மோகனா. மூவரும் பக்கத்து பக்கத்து வீடு, ஒற்றுமையாக வாழ்கிறார்கள்.

இந்த நேரத்தில் MLA சரத் லோகித்ஸ்வா மறைத்து வைத்த 5 கோடி ரூபாய் பணம் திடீரென காணாமல் போகிறது. அந்த பணம் எதிர்பாராத விதமாக இந்த மூன்று குடும்பத்தின் பள்ளி படிக்கும் பசங்க சஞ்சய், கோகுல், நிகில் கையில் சிக்குகிறது.

- Advertisement -

5 கோடி வீட்டுக்கு வந்ததும் என்ன ஆகும்?

இது தான் படத்தின் சுவாரசியமான பகுதி.

 

பணம் வந்ததும் குடும்பத்தில் உள்ள பெண்கள் போடும் திட்டம் தான் யதார்த்தம். கடனை அடைக்கலாம், ஆளுக்கு 10 பவுன் நகை வாங்கலாம், சொந்த வீடு வாங்கலாம் என கனவு காண்கிறார்கள். அடுத்த நிமிடமே MLA அடியாட்களை அனுப்பி தேடுகிறார் என்று தெரிந்ததும் பயந்து நடுங்குவது, செலவு செய்ய பயப்படுவது என பதற்றமாக நகர்கிறது.

இந்த பணம் பாசமுள்ள மூன்று குடும்பத்தை பிரிக்கும்போது படம் சஸ்பென்ஸ் போல மாறுகிறது. ஜெயப்பிரகாஷ் மட்டும் “இது நமக்கு வேண்டாம்” என்று பணத்தை தொடாமல் தனித்து தெரிகிறார். ஜெயப்பிரகாஷ், செந்தி குமாரி, வினோதினி, பிரசன்னா பாலச்சந்திரன் நால்வரும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

இன்னொரு பக்கம் ஹீரோ துஷ்யந்த் (ஜெயப்பிரகாஷ் மகன்) ஆட்டோ ஓட்டுனராக நேர்மையானவர். அவர் ஜனனியை (பணம் கிடைத்த குடும்பத்து பெண்) காதலிக்கிறார். நேர்மையான பையனுக்கும், திடீர் பணம் வைத்திருக்கும் குடும்பத்துக்கும் இடையே வரும் சிறு சண்டைகள் காதல் பகுதி.

ஜேம்ஸ் வசந்தன் இசை நீண்ட நாள் கழித்து இனிமை. பாடல்கள் சுகம்

படத்தின் கிளைமாக்ஸை முன்பே கணிக்க முடிகிறது. பணம் கிடைத்ததும் போலீசுக்கு போகாமல் வீட்டுக்கு தூக்கி வருவது சில இடங்களில் லாஜிக் இடிக்கிறது.

 

ஆல்பாஸ் – பணத்தை விட பாசமும் நட்பும் தான் பெரிது என்று ஆணி அடித்தது போல சொல்கிறார் இயக்குனர் மைதீன். குடும்பத்துடன் பார்க்கலாம்.

ரேட்டிங்: 3/ 5 –