ஆர்யன் – விமர்சனம்

விஷ்ணு விஷால், ஷ்ரத்தா ஸ்ரீநாத், செல்வராகவன் மற்றும் பலர் நடிப்பில் வெளி வந்திருக்கும் படம் ஆர்யன். படம் என்ன சொல்ல வருகிறது ?

நாயகி தொகுப்பாளினியாக இருக்கும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒரு திரைப்பட நட்சத்திரத்தை நேர்காணல் செய்யும்போது பார்வையாளர் பகுதியில் இருக்கும் செல்வராகவன் அரங்கிற்குள் வந்து, வரும் ஐந்து நாட்களில் 5 பேரை கொலை செய்யப் போகிறேன், அவர்கள் பெயரை ஒவ்வொரு நாளும் ஐந்து மணிக்கு அறிவிப்பேன். 6 மணிக்கு அவர்களை கொலை செய்வேன் என்கிறார்.

அதுமட்டுமல்ல, அதற்கு முன்பாக நான் தற்கொலை செய்து கொள்கிறேன் என்று தற்கொலை செய்கிறார். அடுத்தடுத்து வரும் நாட்களில் செல்வராகவன் கூறியது போல் கொலைகள் நடக்க, அதை கண்டுபிடிக்க வரும் விஷ்ணு விஷால் ஐந்தாவது கொலையை தடுக்க, இறந்தவன் எப்படி கொலை செய்கிறான் என்பதை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே மீதி கதை,

- Advertisement -

நாயகன் விஷ்ணு விஷாலுக்கு போலீஸ் கதாபாத்திரம் மிக அருமையாக பொருந்தி இருக்கிறது. மீசை இல்லாமல் வடநாட்டு போலீஸ்காரர்கள் போல் நமக்கு தெரிகிறார். கொலைகாரன் 5 மணிக்கு எப்படி தான் கொலை செய்யப் போகும் நபரை அறிவிக்கிறான் என்பதை கண்டுபிடிக்கும் விதத்தில் விஷ்ணு விஷால் ஒரு ஒரிஜினல் போலீஸ் அதிகாரியாக நம் கண் முன் தெரிகிறார். அவரின் உடல் மொழி அவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் விஷ்ணு விஷால் அவரது திரை வரிசையில் இந்த படம் அவருக்கு ஒரு சிறந்த பெயரை வாங்கித் தரும் என்பதில் நமக்கு ஐயமில்லை

ஷ்ரத்தா ஸ்ரீநாத்.. இவர் தான் நாயகி என்றாலும் இவருக்கும் நாயகனுக்கும் எந்த ஒரு காதல் கட்சியும் இல்லை. ஒரு தனியார் தொலைக்காட்சி தொகுப்பாளனியாக வருகிறார். படத்தின் கதை இவரிடத்தில் தான் இருந்து ஆரம்பிக்கிறது. ஒரு தொகுப்பாளனியாக மிகச்சிறப்பாக தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

அடுத்து படத்தின் முக்கியமான கதாபாத்திரம் இயக்குனர் செல்வராகவன். இவரை வில்லன் என்று சொல்வதா ? அல்லது பொறுப்பான மனிதன் என்று சொல்வதா ? ஒரு கதாசிரியன் என்று சொல்வதா ? கொலைகாரன் என்று சொல்வதா அல்லது புத்திசாலி என்று சொல்வதா ? இப்படி ஏகப்பட்ட கேள்வி நம்மிடம் இருக்கிறது. அப்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது இவரின் கதாபாத்திரம். ஒரு சாமானிய மனிதனின் ஆதங்கம், கோபம், வெறுப்பு, இயலாமை என தன் நடிப்பு பரிமாணங்களை செல்வராகவன் சிறப்பாக செய்து இருக்கிறார், ஒரு புதிய கோணத்தில் ஒரு புதிய க்ரைம் கதையை, புதிய திரைக்கதை மூலம் படம் பார்க்கும் நமக்கு எந்த ஒரு விறுவிறுப்பும் குறையாமல் பரபரப்பாக படத்தை நகர்த்தி செல்கிறார்,, வாழ்த்துக்கள்,

ஆர்யன்- சாதிக்கப் பிறந்தவன்