
‘சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகத் தயாராகிறது
வரவிருக்கும் தமிழ் “ஃபீல்-குட்” காதல், பேண்டஸி திரைப்படமான ‘சிட்டுக்குறிஞ்சி’, 27 நவம்பர் 2026 அன்று உலகம் முழுவதும் உள்ள உங்கள் அபிமான திரையரங்குகளில் வெளியாகும் எனப் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்புக்கு மேலும் சிறப்புச் சேர்க்கும் வகையில், படத்தின் இசை மற்றும் சினிமா போஸ்ட்டர்களுக்கு ரசிகர்கள் அளித்த அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி தெரிவிக்கும் விதமாக, படத்திலிருந்து பிரத்யேகமான “தேங்க்ஸ்” டீஸரை படதயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது.
திரைப்படத்தின் முதல் பாடலான ‘குறிஞ்சி மலை மேல’ யூடியூபில் 1.8 மில்லியன் பார்வைகளைக் கடந்து, இசை ரசிகர்களிடமிருந்து சிறப்பான வரவேற்பைப் பெற்றுள்ளது. ரம்யா நம்பீசன் பாடியுள்ள இந்த உற்சாகமான திருமணப் பாடலுக்குகு. கார்த்திக் பாடல் வரிகளை எழுதியுள்ளார். அறிமுக இசையமைப்பாளர் மாறா இசையமைத்துள்ளார். மாறா எழுதி ஷில்வி ஷரோன் உடன் இணைந்து பாடிய இரண்டாவது பாடலான ‘உள்ளார’ பாடலும் ஒரு மில்லியன் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
அறிமுக இயக்குநர் வீ.ஜெ. மீனாட்சி சுந்தரம் எழுதி இயக்கியுள்ள ‘சிட்டுக்குறிஞ்சி’, பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் தயாரித்துள்ளது. இத்திரைப்படம் காதல், நகைச்சுவை மற்றும் பேண்டஸி கலந்த தனித்துவமான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில், இப்படத்தின் டப்பிங் பணிகள் வெற்றிகரமாக நிறைவடைந்ததாகப் படத்தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இப்படத்தில் ரஜித் மேனன் கதாநாயகனாக நடிக்க, தீப்ஷிகா, நக்ஷா சரண் மற்றும் ஸ்ரீராம் கார்த்திக் ஆகியோர் உடன் நடித்துள்ளனர்.
1983 ஆம் ஆண்டு காலகட்டத்தை உண்மைத்தன்மையுடன் மீண்டும் உருவாக்குவதற்காக, கொடைக்கானலில் உள்ள இயற்கை எழில் சூழ்ந்த மலைச்சரிவுகளில், கிட்டத்தட்ட 80 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமான கிராமத்தையே படக்குழு அமைத்து படமாக்கபட்டது.
திரைப்படத்தின் இசை ரசனையை மேலும் உயர்த்தும் வகையில், இதன் பின்னணி இசை, ஹங்கேரியின் புடாபெஸ்ட் நகரில் உள்ள புகழ்பெற்ற புடாபெஸ்ட் ஸ்கோரிங் கம்பெனி ஸ்டுடியோவில், சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்கள் இடம்பெற்ற நேரடி இசைக்குழுவுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இத்திரைப்படத்தின் ஒளிப்பதிவை பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ மேற்க்கொள்ள. மகேந்திரன் கணேசன் படத்தொகுப்பு பணிகளையும், கலை இயக்கம் ராம்ஜி , மாஸ்டர் தீனா நடன இயக்குனுராகவும் பணியாற்றியுள்ளனர். பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் டி. ஜூட் ஆனந்த் இப்படத்தைத் தயாரித்துள்ளார் மற்றும் ராஜேஷ் ஆர், டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்ஸர்ஸ் ) மற்றும் கடையனேந்தல் ஆர். ஏ. பீட்டர் ஆகியோர் இணைத் தயாரிப்பாளாராக இணைந்துள்ளனர்.
சிட்டுக்குறிஞ்சி’ திரைப்படம் 27 நவம்பர் 2026 அன்று உங்கள் அபிமான உள்ள திரையரங்குகளில் ஷாலினி சினி கிரியேஷன்ஸ் வெளியிடுகிறது.
நட்சத்திரப் பட்டாளம் :
ரஜித் மேனன்,
ஸ்ரீராம் கார்த்திக்,
தீப்ஷிகா,
நக்ஷா சரண்,
வீ.ஜே. பப்பு,
ஜி. எம். குமார்,
தோழர் எல். வி. ஆதவன்,
ராம்ஸ்,
ஹலோ கந்தசாமி,
தேனி முருகன்,
சுஜாதா,
கராத்தே ராஜா,
அட்வகேட் பாபு
ஈஸ்வர்பாபு,
மஞ்சு
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம்: வீஜெ மீனாட்சி சுந்தரம்
தயாரிப்பு: பிளாக் அண்ட் ஒயிட் மீடியா சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட்
தயாரிப்பாளர்: டி. ஜூட் ஆனந்த்
இணை தயாரிப்பாளர்கள்: ஆர் ராஜேஷ், டாக்டர் கே. எஸ். செந்தில் (சசிராம் பிக்சர்ஸ்), கடையநேந்தல் ஆர். ஏ. பீட்டர்
இசை: மாறா
ஒளிப்பதிவு: பிரான்சிஸ் ராஜ்குமார் ஆ
படத்தொகுப்பு: மகேந்திரன் கணேசன்
கலை இயக்கம்: ராம்ஜி
நடன இயக்கம்: தீனா
ஒலி வடிவமைப்பு: டோனி ஜே
SFX: கிஷோர் காமராஜ்
Foley: தினேஷ் நாராயனன்
டப்பிங் : மொகமத் ரிஸ்வான்
VFX: ஜீவரத்தினம் ஆர்
ஆடை வடிவமைப்பு: ஹரிவர்தனி
காஸ்ட்யூமர்: எஸ்.பி. சுகுமார்
மேக்கப்: வேல்முருகன்
விளம்பர வடிவமைப்பு: தமிழ்ச்செழியன்
ஸ்டில்ஸ் : அஜய்
எக்ஸிகியூட்டிவ் புரொட்யூசர்: என். குழந்தைவேலு (மஞ்சு சினி எக்யூப்மென்ட்ஸ்)
லைன் புரொட்யூசர்: குருவேல் கார்த்திக்
புரொடக்ஷன் மேனஜர் : A V பழனிசாமி
மக்கள் தொடர்பு: ரியாஸ் K அஹ்மத், பாரஸ் ரியாஸ்
டிஜிட்டல் மார்க்கெட்டிங்: ஏ. எஸ். பக்தீஸ்வரன், ஆர். ஜெ. முகமது ரஃபி மீரான், ஸ்ரீநிதி பக்தீஸ்வரன்
டிஜிட்டல் பாட்னர்ஸ்: Uyire Media, Infinity Plus Digital Media, Cinemax
ஆடியோ உரிமை: Saregama India Ltd. (RPSG Group)
வெளியீடு : ஷாலினி சினி கிரியேஷன்ஸ்
