
E1′ – திரை விமர்சனம்
நடிப்பு: சதா நாடார்-குமார், மோனிகா செலினா, பாண்டி, பேபிஷிவ்
இயக்கம் & தயாரிப்பு: சதா நாடார்-குமார், மோனிகா செலினா
இசை: இ.ஜே.ஜான்சன் | ஒளிப்பதிவு: எம்.எஸ்.மனோகுமார்
ஒரு அடுக்குமாடி குடியிருப்பு. ஒரு வீட்டில் ஒரு கொலைநடக்கிறது எதிர்பாராமல் இன்னொரு பெண் வந்து சிக்கிக்கொள்கிறாள். அவள் அங்கிருந்து தப்பிப்பாளா?
இதிலிருந்து படம் Flashback-க்கு போகிறது. இந்த கொலை ஏன் நடந்தது? இதற்கும் குழந்தைகள் பாதுகாப்பு, பெண்கள் மீதான அத்துமீறல் என்ற பிரச்சனைக்கும் என்ன தொடர்பு என்பதே மீதி கதை.
இது பொழுதுபோக்கு படம் அல்ல. ஒரு சமூக கருத்தை சொல்ல வந்த சிறிய முயற்சி.
சொல்ல வந்ததை சுருக்கமாக சொன்னது:* இன்று சினிமா என்றாலே 2.30 மணி நேரம். ஆனால் இந்த படம் வெறும் 75 நிமிடங்களில் முடிந்து விடுகிறது.
குழந்தைகள் பாதுகாப்பு என்றாலே பல படங்கள் தேவையில்லாமல் அந்த கொடூர காட்சிகளை விரிவாக காட்டி பரபரப்பு தேடும். ஆனால் E1′ அந்த தவறை செய்யவில்லை.
கதாநாயகனாகவும் இயக்குனராகவும் இருக்கும் சதா நாடார்-குமார் கதையை தாங்குகிறார். மோனிகா செலினாவும் தன் கதாபாத்திரத்தை இயல்பாக செய்துள்ளார். குழந்தை கதாபாத்திரம் முக்கிய பங்கு.
குறைந்த பட்ஜெட் படம் என்பது தெளிவாக தெரிகிறது. ஒளிப்பதிவு, எடிட்டிங், டெக்னிக்கல் விஷயங்களில் பெரிய படங்களின் தரத்தை எதிர்பார்க்க முடியாது. கதையின் பின்னணியை இன்னும் ஆழமாக சொல்லியிருக்கலாம், திரைக்கதை சில இடங்களில் இன்னும் நேர்த்தியாக இருந்திருக்கலாம்.
E1′ என்பது பெரிய பொழுதுபோக்கு படம் அல்ல. பெற்றோர்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேச வேண்டிய ஒரு விஷயத்தை சினிமாவாக பதிவு செய்திருக்கும் சிறிய முயற்சி
ஒரு வரியில்Good Touch, Bad Touch-க்கு அப்பால் – தொடுதலுக்கே இடமில்லை என்று பேசும் 75 நிமிட குறும்படம் போன்ற திரைப்படம்.
