அன்பில் அவன் – திரை விமர்சனம்

 

அசோக் செல்வன் கந்தசாமி), ப்ரீத்தி முகுந்தன் , கதிர் பாலு மகா, சாபுமோன் மற்றும் பலர் நடிப்பு வெளிவந்திருக்கும் படம் அன்பில் அவன்

படம் என்ன சொல்ல வருகிறது

- Advertisement -

நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்யும் பிர்த்திமுகுந்தன் அசோக் செல்வன் ஒரு இயந்திர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்க அவர்களின் கனவான ஹோம் ஸ்டே அதாவது தங்கும் விடுதி அதற்காக மலைபிரதேசத்தில் ஒரு வீட்டை வாங்கி அதற்கான அரசாங்க பர்மிஷன்கள் கிடைக்க எம்எல்ஏ நாடி அந்த எம்எல்ஏ அந்த இடத்தை வாங்க நாடகமாட பிறகு என்ன நடக்கிறது என்பது கதை

அசோக் செல்வன் – ப்ரீத்தி முகுந்தன் கெமிஸ்ட்ரி செம. “உனக்கு என்னை அவ்வளவு பிடிக்குமா சூர்யா” என்று ப்ரீத்தி கேட்கும் காட்சி, லிப் லாக் காட்சி, 70 அடி உயரத்தில் இருந்து ஏரியில் குதிக்கும் காட்சி எல்லாம் இளமையில் துள்ளல் அழகு. கல்யாணத்துக்கு பிறகு வரும் கணவன் மனைவி அழுத்தம், வேலை Stress எல்லாம் யதார்த்தமாக காட்டியிருக்கிறார் இயக்குநர்இரண்டாம் பாதி முழுக்க ஆக்‌ஷன்.

அசோக் செல்வன் தான் படத்தின் பலம். கல்லூரி பையன் போலவும், கோபத்தை அடக்கும் கணவன் போலவும், கிளைமாக்ஸில் வெறித்தனமாக சண்டை போடுபவனாகவும் மூன்று முகம் காட்டுகிறார்

கோவிந்த் வசந்தா BGM காதல் காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது, கௌதமின் ஒளிப்பதிவு மலை, பங்களா காட்சிகளில் அழகு. பீட்டர் ஹெய்ன் சண்டை காட்சிகள் தத்ரூபம்.
இறுதி சண்டைக்காட்சி 20 நிமிடத்திற்கு மேல் சண்டை காட்சி பொறுமையை சோதிக்கிறது. சாதாரண மனிதன் திடீரென நூற்றுக்கு மேல் இருக்கும் நபரை அடிப்பது என்பது சினிமாவில் கூட நடக்காது ஆனா ல் இந்த சினிமாவில் நடந்திருக்கிறது நாயகனும் நாயகியும் கத்தி குத்து வாங்குவது பழைய டி ஆர் படத்தை பார்ப்பது போல் இருக்கிறது

அன்பில் அவன் – காதல் குறைவு அடிதடி நிறைவு

ரேட்டிங்: 2. / 5