லெனின் பாண்டியன் – விமர்சனம்

 

தர்ஷன் கணேசன் (சிவாஜி கணேசன் பேரன்), கங்கை அமரன், ரோஜா, ஸ்ரீதா ராவ், ஆடுகளம் நரேன், போஸ் வெங்கட், யுகேந்திரன், ஜார்ஜ் மரியன்
இயக்கம்: டி.டி.பாலச்சந்திரன்
இசை: இளையராஜா
தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் ஹீரோவாக அறிமுகமாகும் படம்

- Advertisement -

படம் என்ன சொல்ல வருகிறது

சிவகங்கை கிராமத்தில் கங்கை அமரன் – ரோஜா தம்பதி தங்கள் ஆட்டுக்குட்டி மீனாட்சியை செல்லமாக வளர்க்கிறார்கள். அந்த ஆடு, மணல் கொள்ளை கும்பலின் லாரியில் அடிபட்டு இறக்கிறது.

நீதி கேட்டு போலீஸ் ஸ்டேஷன் போகிறார் கங்கை அமரன், அங்கே அவரை விரட்டுகிறார்கள். மணல் கொள்ளையை எதிர்த்து குரல் கொடுக்கிறார். அவருக்கு உதவ வரும் கிராம நிர்வாக அதிகாரி அர்ச்சனாவை மணல் மாஃபியா கும்பல் (யுகேந்திரன்) கொலை செய்கிறது.

நீதிமன்றம் போகிறார் கங்கை அமரன். வழக்கு CBI-க்கு மாறுகிறது. அவரது உயிருக்கு ஆபத்து என்பதால், அவருக்கு பாதுகாப்பு காவலராக நியமிக்கப்படுகிறார் நம் ஹீரோ தர்ஷன்.

தர்ஷன் யார்? அப்பா போலீஸாக இருந்து இறந்ததால் கருணை அடிப்படையில் போலீஸ் வேலை கிடைத்தவர். ஸ்டேஷனில் அவரை யாரும் மதிப்பதில்லை, எடுபிடி வேலை தான் கொடுக்கிறார்கள். சுய சந்தேகத்துடன் இருக்கும் அவர், கங்கை அமரனை காப்பாற்றினாரா? மணல் கொள்ளை கும்பலை சட்டத்தின் முன் நிறுத்தினாரா? என்பதே படம்.

தர்ஷன் கணேசன் – முதல் படம் என்றாலும் கதாபாத்திரத்தை உள்வாங்கி நடித்துள்ளார். கர்வம் இல்லாமல் எளிமையாக நடித்திருக்கிறார் என்று கங்கை அமரனே பாராட்டியிருக்கிறார்.

ஆனால் படத்தின் உண்மையான ஹீரோ கங்கை அமரன் தான். பாரதிராஜா பட ஹீரோ போல படம் முழுவதையும் தாங்கியிருக்கிறார். ஆட்டுக்குட்டிக்காக அழுவது, ரோஜாவிடம் காதலாக பேசுவது என பக்கத்து வீட்டு தாத்தா போல இருக்கிறார். ரோஜா ‘முதல் மரியாதை’ ரோஜாவை நினைவுபடுத்துகிறார்.

ஜார்ஜ் மரியன் நீதிபதியாகவும், போஸ் வெங்கட் போலீசாகவும் பட்டாசாக நடித்துள்ளனர். நீதிமன்ற காட்சிகள் அருமை.
ஜார்ஜ் மரியன் டவாலியின் வசனம் சாட்டையடி

இளையராஜா – டைட்டில் கார்டு முதல் பின்னணி இசையில் ராஜாங்கம் தான். ‘முதல் மரியாதை’ BGM-ஐ பயன்படுத்தியிருப்பது சிறப்பு.

விறுவிறுப்பு, இரண்டாம் பாதியில் ஹீரோயினுக்கு தலையில் அடிபடுவது, புத்தி பேதலிப்பது என ட்ராக் கொஞ்சம் தடுமாறுகிறது. திரைக்கதையில் இன்னும் இணைப்பு தேவை.

மொத்தத்தில் லெனின் பாண்டியன் பார்க்கலாம்.

இது மணல் கொள்ளை, அதிகாரம் Vs அறம் என்பதை பேசும் சமூக அக்கறை படம்.

ரேட்டிங் 3/5