
பீப் – விமர்சனம்
ராகவ், யாமினி லட்சுமணன், பிரேர்ணா கண்ணா, பிரியதர்ஷினி, நிதிஷ் வீரா நடிப்பில்
இல.சண்முக சுந்தர் இயக்கதில் வெளி வந்திருக்கும் படப் பீப்
படம் என்ன சொல்ல வருகிறது
ராகவ்க்கு ஒரு கால் கேர்ள் யாமினியுடன் பழக்கம் ஏற்படுகிறது. அது காமத்தை தாண்டிய ஒரு தோழமை. திடீரென ஒரு நாள் யாமினி மாடியில் இருந்து விழுந்து இறந்து கிடக்கிறார். இது தற்கொலையா? கொலையா?
தோழியின் மரணத்தால் அதிர்ச்சி அடையும் ராகவ், போலீசில் புகார் கொடுத்து, தானும் துப்பறிய களத்தில் இறங்குகிறார். இந்த வழக்கை துப்பறிய அவருக்கு ஒரு ஸ்பெஷல் பவர் இருக்கிறது – ஒரு புகைப்படத்தை பார்த்தாலே அதன் பின்னால் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்கும் ஆற்றல். சூப்பர்மேன் மாதிரி இல்லை, 4 இலக்க பெருக்கல் கணக்கை நொடியில் சொல்வது போன்ற ஒரு எதார்த்தமான சூப்பர் பவர்.
கடைசியில் கொலையாளி யார்? யாமினி சாவுக்கு காரணம் என்ன? என்பதை எதிர்பாராத ட்விஸ்ட்டுடன் சொல்கிறது கிளைமாக்ஸ்.
இது வழக்கமான ரத்தம் தெறிக்கும் கிரைம் படம் இல்லை. துப்பாக்கி, கத்தி சண்டை இல்லாத, கதாபாத்திரங்களை மையமாக வைத்து நகரும் ஒரு திரில்லர் டிரெயின்
படம் முழுக்க வசனங்கள் மட்டுமே அதிகம் அதனால் சில இடங்களில் வேகம் குறைவாக தெரிகிறது யாமினி விலைமாது கதாபாத்திரத்திற்கு எவ்வளவு விலை கொடுத்தாலும் தகும் ராகவ்-யாமினி நட்பு அழகாக காட்டப்பட்டுள்ளது.
வித்தியாசமான சூப்பர் பவர் கான்செப்ட்
பீப் – சத்தம் இல்லாமல் நடக்கும் குற்றங்களை பேசும் ஒரு வித்தியாசமான த்ரில்லர்.
