சண்டக்காரி – விமர்சனம்

லண்டனில் டாப் கம்பெனியில் பவர்ஃபுல் பெண் அதிகாரி ஸ்ரேயா. அவரிடம் அசிஸ்டெண்டாக வருகிறார் நம்ம தமிழ் பையன் விமல். இவர் சாதாரண ஆள் இல்லை, கோல்டு மெடல் வாங்கிய இன்ஜினியர், ஒரு புது App-ஐ கண்டுபிடித்தவர். அந்த App-ஐ லான்ச் செய்யத்தான் ஸ்ரேயாவிடம் வேலைக்கு சேருகிறார்.

ஸ்ரேயாவோ செம ஸ்ட்ரிக்ட். எப்போதும் கோபம். விமலை படுத்தி எடுக்கிறார்.

கதையில் ட்விஸ்ட் – ஸ்ரேயாவின் விசா முடியப்போகிறது. விசாவை நீட்டிக்க இந்தியா போக வேண்டும். போனால், அவருக்கு கிடைக்க இருக்கும் CEO பதவி போய்விடும். என்ன செய்யலாம் என்று யோசித்து, நிரந்தர குடியுரிமை வைத்திருக்கும் விமலை Contract திருமணம் செய்து குடியுரிமை வாங்கலாம் என்று முடிவு செய்கிறார்.

- Advertisement -

இங்கு தான் விமலின் Game ஆரம்பம். அவர் ஸ்ரேயாவின் எதிரியுடன் கூட்டு சேர்ந்து, ஸ்ரேயாவை ஏமாற்றி, அவரது Promotion-ஐ தடுக்க நினைக்கிறார். வெளியே சம்மதிப்பது போல் நடித்து, “என் அப்பா அம்மாவை பார்க்க ஊருக்கு வர வேண்டும்” என்று ஸ்ரேயாவை தமிழ்நாட்டுக்கு அழைத்து வருகிறார்.

அதன்பின் நடந்தது என்ன? ஜெயித்தது ஸ்ரேயாவின் திட்டமா? விமலின் சதியா? என்பதே ‘சண்டக்காரி’.

தஞ்சாவூர் விமல் தான் லண்டன் விமலும். உடை மட்டும் தான் மாறியிருக்கிறது. நடிப்பு அதே தான்.

பார்க்க அழகாக, பளிச்சென இருக்கிறார். கோபக்கார பாஸ் ரோலுக்கு பொருத்தமாக இருக்கிறார். ஆனால் நடிப்பில் இன்னும் மெருகேற்ற வேண்டும்.

பிரபு, உமா, புன்னகை பூ கீதா, சத்யன், KR விஜயா என அனைவரும் தங்கள் வேலையை செய்திருக்கிறார்கள்.

லாஜிக் மீறல்கள் நிறைய இருக்கு. லண்டனில் பல வருடம் இருக்கும் ஸ்ரேயாவுக்கு குடியுரிமை இல்லை, ஆனால் புதுசா போன விமலுக்கு இருக்கு – இதெல்லாம் கேட்கக்கூடாது. ஜாலியாக ஒரு முறை பார்க்க நினைத்தால் பார்க்கலாம்.

|லண்டன் பாஸ் – தமிழ் பையன் இடையேயான ஈகோ கலந்த காதல் நாடகம்.