சர்தார் 2 – விமர்சனம்

கார்த்தி எஸ் ஜே சூர்யா யோகி பாபு மாளவிகா மோகனன் ஆஷிக்காரங்கநாத் ரிஜிஷா விஜயன் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் சர்தார் 2 படம் என்ன சொல்ல வருகிறது

இந்திய உளவுத்துறையான RAW-வின் முக்கிய அதிகாரிகள் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார்கள். இந்த கொலைகளுக்கு பின்னால் இருப்பவன் சர்வதேச கடத்தல் கும்பலின் தலைவன் பிளாக் டேக்கர் என்கிற எஸ் ஜே சூர்யா நோக்கம் ‘Doku’ எனப்படும் உயிர்க்கொல்லி ஆயுதத்தை கைப்பற்றி உலகை தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது.

இதை தடுக்க உளவுத்துறை நம்புவது இரண்டு பேரை தான். ஒருவர் பல வருடங்களாக தலைமறைவாக இருக்கும் முன்னாள் ஸ்பை சர்தார் கார்த்தி இன்னொருவர் அவரது மகன், துடிப்பான போலீஸ் அதிகாரி கார்த்தி பல வருடங்களுக்கு பிறகு அப்பாவும் மகனும் ஒன்று சேர்கிறார்கள். அவர்கள் Doku-வை காப்பாற்றினார்களா? யோகியின் சதியை முறியடித்தார்களா? என்பதே படத்தின் கதை.

- Advertisement -

கார்த்தி – படத்தின் தூண்:
இது முழுக்க முழுக்க கார்த்தியின் படம் என்றே சொல்லலாம். மகன் விஜி கதாபாத்திரத்தில் இளமை, வேகம், ஆக்ஷன் என புகுந்து விளையாடியிருக்கிறார். சேஸிங் காட்சிகளிலும், சண்டைக் காட்சிகளிலும் அவரது எனர்ஜி அபாரம். அப்பா சர்தார் கதாபாத்திரத்தில் நிதானம், கம்பீரம், அனுபவம் என முற்றிலும் மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி அசத்துகிறார். இரண்டு கதாபாத்திரங்களையும் வேறுபடுத்தி காட்டுவதில் கார்த்தி ஜெயித்திருக்கிறார்.

எஸ்.ஜே.சூர்யா:
வில்லனாக வழக்கம் போல சத்தமாக, ஸ்டைலாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் ஏன் இவ்வளவு கொடூரமானவனாக மாறினார் என்ற பின்னணி சின்ன பையன் லாலிப்புக்கு சண்டை போடுவது போல் இருக்கிறது ஆனால் அவர் ரயிலைக் கவுக்கும் சதியில் எப்படி அவர்கள் ஆட்கள் உள்ளே இருப்பார்கள் என்று தெரியவில்லை

மாளவிகா மோகனன், ஆஷிகா ரங்கநாத், ரெஜிஷா விஜயன் மூவருக்கும் கதையில் முக்கியத்துவம் உள்ளது. வெறும் கிளாமருக்காக இல்லாமல் கதையோடு பயணிக்கிறார்கள்.

ஜார்ஜ் வில்லியம்ஸின் ஒளிப்பதிவு படத்திற்கு சர்வதேச தரத்தை கொடுக்கிறது. குறிப்பாக சீனாவில் எடுக்கப்பட்ட பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் கண்களுக்கு விருந்து.

சாம் சி.எஸ்-ன் பின்னணி இசை படத்தின் வேகத்தை கூட்டுகிறது. இவரின் இசை தான் படத்தை பல இடங்களில் காப்பாற்றுகிறது

 

கார்த்தியின் இரட்டை வேட நடிப்பு, பிரம்மாண்டமான தயாரிப்பு, புதிய கதைக்களம். ஹாலிவுட் க்கு சவால் விடுகிறது
படத்தின் நீளம் 3 மணி நேரத்திற்க்கு 1 நிமிடம் குறைவு இன்னும் குறைத்து இருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்

 

சர்தார் 2 – கார்த்தி ரசிகர்களுக்கு மட்டுமல்ல, ஆக்ஷன் பட விரும்பிகளுக்கும் ஒரு நல்ல விருந்து.

சர்தார் 2 — வேகம் உண்டு விவேகம் இல்லை

 

 

ரேட்டிங்-3/5