
ஐ அம் கேம் – விமர்சனம்
துல்கர் ஒரு விபத்த்தில் கையை இழக்க அவருக்கு கை தானம் மூலம் கைபொருத்த படுகிறது பொருத்திய பிறகு அந்த ‘கை” இவரின் வழிக்கு வரமால் அது வேறு வேலை செய்கிறது பிறகு மிஸ்கினை கொலை செய்ய அந்த கை. முயற்ச்சிக்க கை யை தானம் செய்தவர் ஜாதகத்தை பார்த்தால் பெரும் அதிர்ச்சி துல்கருக்கு. இதுவே படத்தின் கதைக்களம்
துல்கர் சல்மான் – நஹாஸ் ஹிதாயத் கூட்டணியில் வந்திருக்கும் ‘ஐ அம் கேம்’ ஒரு வித்தியாசமான முயற்சி. வழக்கமான கேம்ப்ளிங் கதை என்று நினைத்து போனால், அது ஃபேன்டஸி, காதல், பழிவாங்கல் என அனைத்தும் கலந்த ஒரு ஸ்டைலிஷ் என்டர்டெயினர்.
சூதாட்டத்தின் விளைவுகளை ஓரிரு காட்சிகளில், அழுத்தமான வசனங்களில் கடந்து செல்கிறது. “சொல்ல வந்ததை சுருக்கமாக சொல்லி, கதையை நகர்த்துவது” இன்றைய இளைஞர்களுக்கு பிடித்த ஸ்டைல்.
துல்கருக்கும் கயாடு லோஹருக்கும் இடையேயான காதலை இயக்குனர் மிக அழகாக கையாண்டிருக்கிறார். ஆரம்பத்தில் துல்கரை ஒரு நோயாளி போல பார்த்து நிராகரிக்கும் கயாடு, பின்னர் அவனது வலி, அவனது கடந்த காலம், அவன் சூதாட்டத்தில் சிக்கிய காரணம் புரிந்து, பரிதாபத்தில் இருந்து காதலாக மாறுவது மிக இயல்பானது. இது க்ளிஷே இல்லை, இது தான் யதார்த்தம்.
ஃபேன்டஸி உலகத்தை கண்முன் நிறுத்திய கேமரா, பிரம்மாண்டமான செட், துல்கரின் ஸ்டைலிஷ் லுக், அதிரடி பின்னணி இசை என அனைத்தும் சூப்பர்
ஒரு சுவாரஸ்யமான ஃபேன்டஸி கதையை எடுத்து, அதை வெறும் மேஜிக்காக முடிக்காமல், அழுத்தமான பழிவாங்கும் கதையை நோக்கி கொண்டு சென்றது தான் இயக்குனரின் வெற்றி.
இது படம் அல்ல
, கண்டிப்பாக தியேட்டரில் கொண்டாட வேண்டிய ஸ்டைலிஷ் கேம்
