பியார் பிரேமா கல்யாணம் – விமர்சனம் 

 

இயக்குனர் இளன், சான்வீ மேகனா, ராதிகா சரத்குமார், யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம் மற்றும் பலர் நடிப்பில்

இளன் இயக்கத்தில் இன்று ஓட்டிட்டியில் வெளியாகி இருக்கும் படம் பியார் பிரேமா கல்யாணம்

- Advertisement -

பாவி (சான்வீ) – ஒரு பிரபல இன்ஃப்ளூயன்சர். திருமணத்திற்கு பிறகும் தன் அம்மா வீட்டை விட்டு போக மாட்டேன் என்று பிடிவாதம் பிடிக்கிறார். அதனால் மாப்பிள்ளை இளன், பொண்ணு வீட்டுக்கே மாப்பிள்ளையாக வீட்டோடு மாப்பிள்ளையாக வருகிறார்.

ஒரு பெண் வீட்டில் மருமகன் வந்து தங்கினால் என்ன நடக்கும்? ஈகோ கிளாஷ், கலாச்சார மோதல்கள், மாமியார் – மருமகன் காமெடி, புது கல்யாண ஜோடியின் சண்டை சமாதானம் தான் படம்.

இயக்குனராக நமக்கு தெரிந்த இளன், இந்த படத்தில் ஹீரோவாகவும் அறிமுகமாகி இருக்கிறார். முதல் படத்துக்குரிய பதட்டம் இல்லாமல், இயல்பாக நடித்திருக்கிறார். அவருடைய டைமிங் காமெடி படத்துக்கு பெரிய பலம்.

சான்வீ மேகனா தான் படத்தின் சர்ப்ரைஸ். குடும்பஸ்தன் படத்துக்கு பிறகு இதில் இன்னும் மெச்சூர்டான நடிப்பு. மாடர்ன் பெண்ணாகவும், அதே நேரம் குடும்ப பாசம் உள்ள பெண்ணாகவும் அழகாக செய்திருக்கிறார்.

ராதிகா, எம்.எஸ்.பாஸ்கர், யோகி பாபு மூவரும் தங்கள் அனுபவத்தால் படத்தை தூக்கி பிடிக்கிறார்கள். குறிப்பாக யோகி பாபுவின் ஒன் லைனர்கள் வீட்டில் பார்க்கும்போது நல்லா சிரிக்க வைக்கும்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் 2 பாடல்கள் மனதில் நிற்கின்றன. பின்னணி இசை குடும்ப காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது.

– புதுமையான ஒன் லைன் – மாப்பிள்ளை பெண் வீட்டில் தங்குவது
– குடும்பத்தோடு பார்க்கும் ஜாலியான, டபுள் மீனிங் இல்லாத காமெடி

– இரண்டாம் பாதியில் கொஞ்சம் சீரியல் போல் நீளும் குடும்ப செண்டிமென்ட்
– கதை ரொம்ப பெரிய ட்விஸ்ட் இல்லாமல் பிளாட்டாகவே போகிறது

பியார் பிரேமா கல்யாணம் – இது பெரிய பிரச்சனைகளை பேசும் படம் இல்லை. இன்றைய தலைமுறை கல்யாணம், ஈகோ, குடும்ப உறவுகளை ஜாலியாக, அழகாக சொல்லும் ஒரு Feel-Good OTT படம். Netflix-ல் குடும்பத்தோடு கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம்.