கான் சிட்டி – விமர்சனம்

 

அறிமுக இயக்குநர் ஹரிஷ் துரைராஜ் இயக்கிய ‘கான் சிட்டி’ ஒரு குடும்ப கிரைம்-காமெடி படம். அர்ஜூன் தாஸ், அன்னா பென், யோகி பாபு, வடிவுக்கரசி நடிச்சிருக்காங்க. கதை என்னனா, நிதி நெருக்கடில இருக்குற ஒரு நடுத்தர குடும்பம் எதிர்பாராம ஒரு மோசடி சம்பவத்துல மாட்டிக்குது. அதுல இருந்து வாழ்கையை திருப்பி போடுற வாய்பு கிடைக்குதா இல்லையானு பரபரப்பா போகுது படம்.

படத்தோட ஹைலைட் கதை. குடும்ப உணர்வு, காமெடி, கிரைம் மூணையும் கலந்து லைட்டா சொன்ன விதம் ரசிக்க வைக்குது. அர்ஜூன் தாஸ் ஆக்ஷன் ஹீரோ இமேஜை உடைச்சு, சாதாரண குடும்ப ஆளா இயல்பா நடிச்சிருக்காரு. அன்னா பென் உணர்வு பூர்வமான ரோலை கச்சிதமா செஞ்சிருக்காங்க. யோகி பாபு, வடிவுக்கரசி காம்போ சிரிப்புக்கு கேரண்டி.

- Advertisement -

தொழில்நுட்பமும் பக்க பலமா இருக்கு. அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவுல நகரத்தோட பரபரப்பும் குடும்பத்தோட நெருக்கடியும் நல்லா தெரியுது. ஷான் ரோல்டன் இசை, பின்னணி இசை காமெடி + த்ரில் சீன்களை தூக்கி நிக்க வைக்குது. படம் முழுக்க குடும்பத்தோட உக்காந்து பாக்குற மாதிரி கிளீனா எடுத்திருக்காங்க.

மைனஸ்னு பாத்தா, ஆரம்பத்துல கேரக்டர்களை அறிமுகப்படுத்துற இடங்கள் கொஞ்சம் நீளமா போகுது. ஆனா அப்புறம் வர்ற காமெடி, சென்டிமென்ட் சீன்கள் அந்த குறையை சரி பண்ணிடுது.

மொத்துல ‘கான் சிட்டி’ குடும்பத்தோட சிரிச்சு, கொஞ்சம் டென்ஷன் ஆகி பாக்க வேண்டிய ஒரு லைட் என்டர்டெய்னர். அர்ஜூன் தாஸோட மாறுபட்ட நடிப்புக்காகவும், வித்தியாசமான கதைக்காக பார்க்கலாம்

ரேட்டிங் 3/5