பராசக்தி – விமர்சனம்

 

சிவகார்த்திகேயன், மோகன் ரவி, அதர்வா மற்றும் பிரபலங்களுடன் வெளிவந்திருக்கும் படம் பராசக்தி.

இந்தத் தலைப்பை கேட்டதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது நடிகர் திலகத்தின் முதல் படம்..  சக்சஸ்.. இந்த வார்த்தை தான் நடிகர் திலகம் பேசிய முதல் வசனம். அந்த வசனத்துடைய பெயர் கொண்ட இந்த பராசக்தியும் சக்சஸ் தான்..

- Advertisement -

படம் என்ன சொல்ல வருகிறது ? பார்ப்போம் வாருங்கள்..

இந்தியா ஆங்கிலேரியிடம் பல நூறு ஆண்டு அடிமைப்பட்டு கிடந்து சுதந்திரம் பெற்றோம் என்ற சந்தோஷம் நமக்கு இருந்தாலும் தென்னகத்து மக்கள் அதுவும் முக்கியமாக தமிழ் மக்கள் எவ்வாறாக வடக்கத்திய தலைவர்களிடம் நாம் அடிமைப்பட்டு கிடந்தோம் மொழிப்போராட்டாத்தினால் நாம் நம் தமிழக அரசியல் கழகங்களும் எழுச்சி இளைஞர்களும் எவ்வாறாக இந்தி திணிப்பை எதிர்த்துப் போராடினார்கள், எத்தனை உயிர்கள் பலி வாங்கப்பட்டன என்பதை நாம் மறந்து 60 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

ஆனால் இக்கால இளைஞர்களுக்கு அந்த மொழி உணர்வை பற்றி சரிவர தெரியவில்லை. அதைப்பற்றி முழுமையாக நாம் அறிந்து கொள்ள வந்திருக்கும் படமே பராசக்தி.

நாயகன் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவன்.. புறநானூறு என்று புரட்சி படை வைத்து இந்தியை எதிர்க்கும் தமிழன். தன் படையில் ஒருவர் உயிர் போனதும் புரட்சியை தூக்கி எறிந்து குடும்பத்தைக் காக்க போனவன். ஆனால் சிவகார்த்திகேயன் தம்பி அதர்வா ஒரே இரத்தம் அல்லவா ? அந்தப் புரட்சியை இவன் கையில் எடுக்க துப்பாக்கி குண்டுக்கு இறையாகிறான்.

தன் புரட்சியை மறைத்து தன் தமிழ் உணர்வை கட்டுக்குள் வைத்து ஒரு சாதாரண வாழ்க்கை வாழ்ந்த சிவகார்த்திகேயன் எப்படி வீறுகொண்டு எழுந்து இந்தி திணிப்பை எதிர்த்து போராடி தமிழை தமிழகத்தின் ஆட்சி மொழியாக ஆக்க எவ்வாறு கஷ்டப்பட்டான் என்பதை சொல்கிறது இந்த பராசக்தி.

சிவகார்த்திகேயன்.. இவருக்கு நமது முதல் சல்யூட் இந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு.. சிறப்பு.. ஒரு போராளியாக இவர் போராட்ட குணம் மிக சிறப்பாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

அதே சமயம் தன் தோழன் உயிர்விட்டதும் தன்னால் எந்த உயிரும் போகக்கூடாது என்ற எண்ணத்தில் போராட்டத்தை கைவிடுவது ஒரு எதார்த்த மனிதனின் இயல்பான வாழ்க்கை. மத்திய ரயில் பணியில் இந்தி தெரிந்தால் வேலை என்ற நிலையில் எதிர்த்து இந்தியை கற்றுக்கொண்டு நேர் முகத் தேர்வுக்கு செல்லும்போது அங்கு இவர் பேசும் இந்தி சரியில்லை என்று சொல்லும்போது இவர் பேசும் வசனங்கள் தமிழக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டியவை.

1960 காலகட்டங்களில் உள்ள மனிதரின் உடல் மொழியை தன்னுள் வாங்கி சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். சிவகார்த்திகேயனின் தமிழ் திரை உலக வரலாற்றில் பராசக்தி இவர் கிரீடத்தின் கோகினூர் வைரமாகும்.

ரவி மோகன் நிகழ்காலத்தில் கதாநாயகனாக இருந்தும் இந்தக் கதையில் எதிர் நாயகனாக வலம் வருகிறார் அதுவும் மத்திய உளவுத்துறையாக. ரயிலை எரிக்கும் சிவகார்த்திகேயனை எதிர்க்கும் முயற்சியில் இவரின் கை ஊனமடைய அதற்கு பழிவாங்கும் எண்ணத்தில் பல ஆண்டுகளாக சிவகார்த்திகேயனை தேடும் ஒரு உளவுத்துறை அதிகாரி.

ஆனால் இவரும் தமிழன் தான். ஆனால் தன் வடக்கத்திய தாயிடம் ஏன் ஒரு தமிழனுக்கு என்னைப் பெற்றாய் என்று கேட்கும் பொழுது தமிழன் மீது இவர் கொண்டிருக்கும் வெறுப்பு சிறப்பாக வெளிப்படுத்துகிறது. கையெழுத்து போராட்டத்தை தடுக்கும் முயற்சியில் இவர் நடத்தும் அதிரடி வேட்டையில் பல உயிர்கள் பலி போனது மறக்க முடியாத வரலாற்றுச் சான்று.

அதர்வா அண்ணனுக்கு ஏற்ற தம்பி. தன் கதாபாத்திரம் அறிந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார். அதே சமயம் அண்ணாவின் பேச்சை கேட்க மறுக்கும் பொழுது சிவகார்த்திகேயன் இந்த  “அண்ணா” வின் பேச்சையும் கொஞ்சம் கேளுப்பா என்ற வசனம் திராவிட கழகத்தின் மீது தமிழக மக்கள் எந்த அளவுக்கு பற்று கொண்டிருந்தார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது.

நாயகி இவரை தெலுங்கர் கதாபாத்திரமாக உருவாக்கப்பட்டிருக்கிறது ஏனென்றால் இந்தி திணிப்பை எதிர்த்தவர்கள் தமிழர்கள் மட்டுமே என்ற எண்ணம் பரவலாக இருக்கிறது. அது உண்மை இல்லை தென்னகத்து மக்கள் அனைவரும் இந்தி திணிப்பை எதிர்த்தார்கள் என்பது வரலாற்று உண்மை அதை உறுதிப்படுத்தவே இந்த கதாபாத்திரம் மிகச் சிறப்பாக செய்திருக்கிறார்.

சிவகார்த்திகேயன் பாட்டியாக வருபவர் மணியாடர் பூர்த்தி செய்யும் படிவத்தில் இந்தி மட்டுமே இருக்கிறது இதை  பூர்த்தி  செய்து குடுங்கள் என்று அலுவலரிடம் கேட்க, எனக்கு இந்தி தெரிந்தால் நான் ஏன் இங்கு வேலை செய்கிறேன் என்று சொல்ல மிக சிறப்பான காட்சி. இது சமீபத்தில் ரயில்வே முன்பதிவு படிவத்தில் ஒரு தமிழர் தமிழில் பூர்த்தி செய்ய அதை முன் பதிவு செய்யும் அலுவலர் இது என்ன மொழி என்று கேட்க இது எனக்கு தெரியாது என்று அந்த இந்தி தெரிந்த அலுவலர் சொல்லும் நிகழ்ச்சி சமீபத்தில் தமிழகத்தில் நடந்தது அதை சுட்டிக் காட்டுகிறது இந்த காட்சி.

அண்ணாவாக சேத்தன் அவர்கள் மிகச் சிறப்பாக உருவப் பொருத்தம் அமைகிறது. இவரின் காட்சிகள் பல காணாமல் போயிருக்கிறது என்பது படம் பார்க்கும் நமக்கு தெரிகிறது.

இயக்குனர் சுதா கொங்கரா இயக்கம் மிகச் சிறப்பு. இந்தக் கதையை எடுக்க ஒரு மிகப்பெரிய தைரியம் வேண்டும். அந்த தைரியத்துடன் படத்தை சிறப்பாக இயக்கி இருக்கிறார் அவருக்கு நமது வாழ்த்துக்கள்.

 

பராசக்தி- தமிழனின் தமிழ் குரல்