தி ராஜா சாப் –  விமர்சனம்

 

பிரபாஸ், சஞ்சய் தத், சமுத்திரகனி, மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் தி ராஜா சாப் படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள் பார்ப்போம்.

பிரபாஸின் பாட்டி தன் கணவர் சஞ்சய் தத்தை தேடிக்கொண்டிருக்கும் ஒரு அல்சீமர் டிஸிஸ் நோயாளி. ஹைதராபாத்  சார்மினாரில் தாத்தா இருப்பதை அறிந்த பிரபாஸ் தாத்தாவை தேடி செல்கிறார். அதேசமயம் தாத்தா பாட்டியை மாந்திரீக முறையில் வசியம் செய்து திருமணம் செய்து கொண்டு பாட்டியின் சமஸ்தானத்தில் உள்ள சொத்துக்கள் அனைத்தையும் திருடிக் கொண்டு சென்று விடுகிறார். இதை அறிந்த பிரபாஸ் தாத்தாவை தேட தாத்தா இறந்து பேயாகி விட அது மட்டுமில்லாமல் பாட்டியை சாகடித்து தன் மறு ஜென்ம பிறப்பை எடுக்க முயற்சிக்க அதை தடுக்க முயற்சிக்கிறார் பிரபாஸ். எப்படி என்று பாருங்கள் தி ராஜா சாப்

- Advertisement -

பிரபாஸ் பான் இந்தியா ஸ்டார் ஆக அதுவும் நகைச்சுவை, அதிரடி, ஆக்சன், சென்டிமென்ட் என அனைத்தையும் கலந்து தன் நடிப்பு நவரசத்தை வழங்கி இருக்கிறார். இவர் காதலிக்க, மன்னிக்கவும்.. இவரை காதலிக்கும் மூன்று பேர் அந்த மூன்று பேரையும் சமாளிப்பது ஒரு பக்கம் இன்னொரு பக்கம் பேயிடமிருந்து தன் பாட்டியை காப்பது ஒரு பக்கம் என மத்தளத்தில் அடி வாங்குவது போல், மன்னிக்கவும்… ட்ரம்ஸ்சில் அடி வாங்குவது போல் நாலாபக்கமும் வாங்குகிறார். வழக்கம்போல் இறுதிக்காட்சியில் ஜெயிக்கிறார்..  நாயகனல்லவா ?.

அடுத்து நாயகிகள் மூன்று பேர்.. மூன்று பேரை தனித்தனியாக சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரும் கவர்ச்சிக்கு பாட்டுக்கு என இயக்குனர் முடிவெடுத்ததால் அந்த வேலையை சிறப்பாக செய்து இருக்கின்றனர். எதற்காக நாயகி ஒருவருக்கு கன்னியாஸ்திரி ஆக வேண்டும் என்ற ஆவல் பிறகு ஏன் காதல் புரியவில்லை..

சமுத்திரகனி இவர்தான் வில்லன் என்று நடித்தால் இல்லை இல்லை நான் நல்லவன் உன் தாத்தா தான் கெட்டவன் என்ற கதை சொல்லும் போது நமக்கு கதை புரிய வருகிறது.

இயக்குனர் ஒரு பேண்டஸி பேய் படத்தை எடுத்து அதை நகைச்சுவையாக தர வேண்டும் என்று எண்ணி மிக சிரத்தையுடன் காட்சிக்கு காட்சி பிரம்மாண்டம் என சிறப்பாக வடிவமைத்து இருந்தாலும் தான் எதிர்பார்த்தது நடக்காதது அவர் துரதிஷ்டமே.

பேய் கதை சொல்ல வருவார் என்று பார்த்தால் அதில் ஹிப்னாடிசம், மெஸ்மரிசம் என அதனுடன் விஞ்ஞானத்தை சேர்த்து நம்மையும் குழப்பி பார்க்கும் ரசிகனின் குழப்பி இருக்கிறார்.

சஞ்சய் தத்.. இவர் ஆவியாக இருக்கும்போது எதற்கு ஹிப்னாடிசம் செய்ய வேண்டும் ? ஆவியே அனைத்து வேலையும் பார்த்துக் கொள்ளுமே.. ஏதோ இயக்குனர் புதுமையாக சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் சில விஷயங்களை சொதப்பி எடுத்திருக்கிறார்.

ஆனால் ஆர்ட் டைரக்டரை பாராட்டியே ஆக வேண்டும். சிறப்பாக செட்டை வடிவமைத்து சிறப்பு செய்திருக்கிறார். அவருடன் ஒத்துழைத்து கிராபிக்ஸ் செய்தவருக்கும் நமது வாழ்த்துக்கள்.

பிரபாஸின் ஓபனிங் சாங் அவர் ரசிகருக்கு கொண்டாட்டம்/ தமனின் அதிரடி இசையால் தியேட்டர் அதிர்கிறது.

 

தி  ராஜா  சாப்- பெயரில்  மட்டும்

 

ரேட்டிங்-3/5