சாவீ ; விமர்சனம்

 

படம் என்ன சொல்ல வருகிறது ?

சாவு வீடு என்ற தலைப்பில் இருந்த இந்த படத்தை அறச்சொல்  காரணமாக சாவீ என்ற பெயர் மாற்றத்துடன் வெளி வந்திருக்கிறது.

- Advertisement -

நாயகன் மாமன் மகளை காதலிக்கிறான். மாமன் இதற்க்கு ஒத்துக்கொள்ள மறுக்கிறான். ஒரு விபத்தில் மாமன் மரணம் அடைகிறான். விபத்துக்கு காரணம் என்ன ? அதேசமயம் பிரேதம் அன்று இரவு காணாமல் போய்விடுகிறது. இந்த பிரேதத்தை எடுத்தது யார் ? ஏன் எடுத்தார்கள் என்பதை சொல்ல வருகிறது சாவீ.

நாயகன் உதயதீப் சிறுவயதில் தொலைக்காட்சி தொடர்களும் மற்றும் படங்களிலும் நடித்திருந்தாலும் அவருக்கு இது முதல் கதாநாயகனாக நடிக்கும் படம். சிறு வயது முதல் நடித்து வந்ததினால் அவருக்கு நடிப்பில் அனுபவம் அதிகம். அந்த அனுபவம் இந்த நாயகன் கதாபாத்திரத்திற்கு மிகவும் உதவி புரிந்து இருக்கிறது. பாத்திரம் அறிந்து பக்குவமாக தன் நடிப்பை வழங்கி இருக்கிறார்.

ஆதேஷ் பாலா இரண்டாம் கதாநாயகன் இன்ஸ்பெக்டராக வருகிறார். இவர் மறைந்த காமெடி நடிகர் சிவராமனின் மகன் ஆவார். இவர் தாயும் பின்னணி குரல் ஜலைஞர் ஆவார்.. பல படங்களில் அடியாளாகவும் பிறகு துணை வில்லனாகவும் நடித்து பிறகு குணச்சித்திர பாத்திரங்களும் மற்ற நகைச்சுவை பாத்திரங்களும் நடித்து தன் நடிப்பு வாழ்க்கையை உயர்த்திக் கொண்டு வருகிறார். அவருக்கு இந்த படம் ஒரு நல்ல எதிர்காலத்தை உருவாக்கும் என்பதில் ஐயமில்லை.

நாயகனின் நண்பனாக வரும் யாசர், ராட்சசன் படத்தின் மூலம் பிரபலமானவர். இந்தப் படத்தில் ஸ்லேட்டில் நாம் எழுதும் பல்பத்தை சாப்பிட்டுக் கொண்டே நடித்திருக்கிறார்.  நகைச்சுவை கதாபாத்திரம் தான்/ பயிற்சி இன்னும் தேவை.

நாயகி கவிதா சுரேஷ் பக்கத்து வீட்டு பெண்ணின் முகம் அளவான நடிப்பு சிறப்பு.

இயக்குனர் ஆண்டனி அஜித் ஒரு புதிய கதைக்களத்தை எடுத்துக்கொண்டு நகைச்சுவை பாணியில் கதை சொல்ல முயன்று, அதில் ஓரளவு வெற்றியும் பெற்றிருக்கிறார்.

திரைக்கதையிலும் வசனத்திலும் இன்னும் கொஞ்சம் முயற்சி செய்திருந்தால் படம் வெற்றிப்பட வரிசையில் கண்டிப்பாக இடம் பிடித்திருக்க வாய்ப்பு இருக்கிறது என்பது நமது எண்ணம். அதேசமயம் போதைக்கு எதிரான ஒரு தீர்வையும் மனிதன் உடல் ஆரோக்கியத்துக்கு தூக்கம் எந்த அளவுக்கு முக்கியம் என்பதையும் சொல்லி இருக்கும் விஷயம் மிகவும் பாராட்டுக்குரியது.

 

இயக்குனரின் முயற்சிக்கு நமது வாழ்த்துக்கள்..

 

சாவீ –  போதை அடிமைவாசிகளின் திறவுகோல்