நிர்வாகம் பொறுப்பல்ல ; விமர்சனம்

 

எஸ்.கார்த்தீஸ்வரன், லிவிங்ஸ்டன், இமான் அண்ணாச்சி, பிளாக் பாண்டி, ராணா, ஆதவன், அகல்யா வெங்கடேசன், ஸ்ரீநிதி, கோதை சந்தானம், அம்மன்புரம் சரவணன், ராதாகிருஷ்ணன், எம்.ஆர் அர்ஜுன், மிருதுளா சுரேஷ், ஜெயஸ்ரீ சசிதரன், தீக்ஷன்யா, மஞ்சு, சர்க்கார் மீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். படம் என்ன சொல்ல வருகிறது ? வாருங்கள்.. பார்ப்போம்.

ஏமாறாதே ஏமாற்றாதே என்ற புரட்சித்தலைவரின் பாடலுக்கு ஏற்ப ஏமாற்றுபவர்களை விட ஏமாறுபவர்கள் இங்கு அதிகம். அந்த ஏமாறுபவர்களுக்கு ஒரு விழிப்புணர்வு படமே இந்த நிர்வாகம் பொறுப்பல்ல.

- Advertisement -

சுமார் 20 வருடங்களுக்கு முன்பு 250 ரூபாய் கட்டினால் செல்போன் தருகிறோம் என்று விளம்பரத்தை பார்த்து நிறைய பேர் பணம் கட்டியிருக்கிறார்கள். ஆனால் பணம் கட்டியவர்கள் இன்று மறந்து போய் இருப்பார்கள். மறந்து போனவர்களுக்கு ஞாபகப்படுத்த வருகிறது நிர்வாகம் பொறுப்பல்ல.

நாயகனின் ஆன்லைன் விளம்பரம் ஏமாற்று வியாபாரம் என ஒரு நகைச்சுவை நாயகன் போல் கலகலவென்று தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார் நாயகன் கார்த்தீஸ்வரன். ஈஸ்வரன் மகன் கார்த்தி இதை இரண்டையும் பெயராக கொண்டிருக்கும் இவர் நாயகன் மட்டுமல்ல இயக்குனரும் இவரே.  நாயகன் மிக விரைவில் மிகப்பெரிய நாயகனாக வலம் வருவார் என்பது நமது நம்பிக்கை.

நாயகி ஸ்ரீநிதி காவல் ஆய்வாளர் கதாபாத்திரம். இளமைத்துள்ளும் அழகு, நடிப்பில் ஒரு மிளிர்வு, கண்களில் ஒரு வீரம் என தன் கதாபாத்திரம் அறிந்து அழகாக செய்து இருக்கிறார். ஏமாறும் கதாபாத்திரத்தில் லிவிங்ஸ்டன் அவரின் முகபாவங்கள் ஏமாற்றங்களுக்கு ஏற்றார்போல் இருப்பதால் அந்த கதாபாத்திரம் சிறப்பு. மற்ற நடிகர்களும் அருமை.

இசை ஸ்ரீகாந்த் தேவா.. ஸ்ரீகாந்த் தேவா என்றால் அலட்டல் இசை, அலம்பல் இசை இருக்கும். ஆனால் இந்த படத்தில் இது மிஸ்ஸிங் ஏன் என்று தெரியவில்லை. பரபரப்பாக சென்ற படம் பின், பாதையில் சிறிது தொய்வு ஏற்படுகிறது. திரைக்கதையில் இந்த தொய்வை சரி செய்து இருந்தால் சதுரங்க வேட்டை படத்தை பின்னுக்குத் தள்ளி இருக்கும். இருந்தாலும் வாழ்த்துக்கள் இயக்குனருக்கு..

 

நிர்வாகம் பொறுப்பல்ல ; படம் பார்ப்பவர்களுக்கு நாங்கள் பொறுப்பல்ல