தி பெட் ; விமர்சனம்

 

ஸ்ரீகாந்த், சிருஷ்டி டாங்கே,  ஜான் விஜய், பிளாக் பாண்டி மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் ‘தி பெட்’. படம் என்ன சொல்ல வருகிறது ?

சென்னையில் ஐடியில் வேலை பார்க்கும் நண்பர்கள் நால்வர் வீக் என்ட் எனப்படும் பொழுதுபோக்கிற்காக மாது உடன் ஊட்டி சென்று ஜல்சா செய்யலாமென்று எண்ணத்தில் சிருஷ்டி டாங்கே என்கிற விலைமாதுவை அழைத்துக்கொண்டு ஊட்டி செல்ல அங்கு சிஷ்டி டாங்கே காணாமல் போகிறார். நண்பர்களில் ஒருவன் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். எப்படி, ஏன் என்ற கேள்விக்கு பதில் கிடைக்க பாருங்கள்.. தி பெட்

- Advertisement -

ஒரு கட்டில் அதாவது ஒரு பெட் கதை சொல்ல ஆரம்பிக்கிறது என்ற கோணத்தில் இயக்குனர் படத்தை ஆரம்பிக்கிறார். விலைமாது உடன் ஊட்டி வரும் ஸ்ரீகாந்துக்கு அவர் மேல் ஒரு காதல். அதனால் நண்பர்கள் படுக்கையை பகிர முடியாமல் பல கோணங்களில் தடுக்கிறார். தன் காதலை அவளிடம் சொல்ல அவளோ இதே போல் நிறைய பேர் என்னிடம் சொல்லி இருக்கிறார்கள் என்று கூற, உன்னை என் மனைவியாக வேண்டும் என்று என் தாய் படம் வரைற்று வைத்திருக்கிறாள் என்று சொல்ல தாயை மதிக்காத சிருஷ்டி டாங்கேவே கொலை செய்கிறார் ஸ்ரீகாந்த். ஆனால் நண்பரை கொலை செய்தது ஏன் என்று ஒரு கதை.

ஸ்ரீகாந்த் எப்போதும் போல் சாக்லேட் பாய் தான் நடிப்பும் அவர் எப்போதும் செய்வதுதான் எந்த மாற்றமும் இல்லை இந்த படத்திலும் அப்படியே செய்திருக்கிறார்

சிருஷ்டி டாங்கே கன்னக்குழி அழகி.. சிரிப்பழகி என்ற இரண்டு அம்சங்களை வைத்துக்கொண்டு படம் முழுக்க சிரித்துக் கொண்டே வருகிறார். நாயகி இவர் என்பதால் கிளுகிளுப்பு காட்சிகள் குறைவாக இருக்கிறது இவருக்கு.

ஜான் விஜய் போலீஸ் அதிகாரி வெகு நாட்களுக்குப் பிறகு அலட்டல் இல்லாமல் அலம்பல் இல்லாமல் சிறிது நிறைவாக செய்திருக்கிறார்.

ஒரு விலைமாதுவை காதலிக்கும் நாயகன் என்ற ஒரு கதைக்கருவை எடுத்துக்கொண்டு இயக்குனர் திரைக்கதையை அமைக்க மிகவும் கஷ்டப்பட்டு இருக்கிறார். காட்சிகளை அவர் நகத்த மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது படத்தின் ஓட்டத்தின் போது நமக்கு தெரிகிறது.

ஸ்ரீகாந்த் உடன் நண்பர்கள் மூவரும் அடிக்கும் லூட்டிகள் படத்திற்கு தேவையற்ற காட்சியாக இருக்கிறது. அதுவும் பிளாக் பாண்டியின் அலம்பல் தாங்க முடியவில்லை.