சரீரம் – விமர்சனம்

 

தர்ஷன் பிரியன் சார்மி விஜயலட்சுமி மனோஜ் ஷகிலா மற்றும் பலர் நடிப்பில் ஜிவிபி பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜிவி பெருமாள் இயக்கத்தில் வரவிருக்கும் படம் சாரீரம்

படம் என்ன சொல்ல வருகிறது

- Advertisement -

வழக்கம்போல் நாயகனும் நாயகியும் காதல்

காதலியின் தந்தை கோடீஸ்வரன் காதலுக்கு எதிர்ப்பு. தாய் மாமனை மணம் முடிக்க பெற்றோர்கள் முடிவு. நாயகன் தாய்மாமன் மூலம் அடித்து வீசப்படுகிறார். காதலன் மரணமடைந்தது எண்ணி காதலி தூக்கில் தொங்குகிறாள். இருவரும் பிழைத்துக் கொள்ள அவர்கள் எடுக்கும் முடிவு. இதுவரை தமிழ் சினிமாவில் காட்டிராத நாம் பார்த்திராத புதிய முடிவு என்னவென்று தெரிந்து கொள்ள பாருங்கள். சாரீரம்..

நாயகன் தர்ஷன் பிரியன் அறிமுக நாயகன் என்றாலும் உருவத்திலும் நடிப்பிலும் நடனத்திலும் சண்டை காட்சிகளிலும் அறிமுகம் என்று தெரியவில்லை.

மிகச்சிறப்பாக தன் பங்களிப்பை செய்திருக்கிறார் சண்டைக்காட்சிகளில் அதிரடி அசத்தல்.. காதல் காட்சிகளில் ஒரு ஏக்கம், ஒரு பிரிவு என பலவித முக பாவங்களை நம் கண் முன் கொண்டு வருகிறார்..

நாயகி சார்மி விஜயலட்சுமி அழகு சிலை.. நடிப்பிலும் ஒரு அழகு.. எங்கேயோ பார்த்தது போல் அவர் முகம்.. காதலன் இறந்த செய்தியை கேட்டு அவரின் கண்கள் சொல்லும் வசனங்கள் ஏராளம்

மணமுடிக்க தன் காதலனிடம் அவர் சொல்லும் முடிவு இதுவரை யாரும் எந்த பெண்ணும் எந்த காதலியும் எடுத்திராத முடிவு.

கவர்ச்சி கன்னி ஷகிலா இந்த படத்தில் ஒரு மருத்துவராக வருகிறார். அவரைப் பற்றி நாம் சொல்ல வேண்டியதில்லை. மற்றும் பாய்ஸ் ராஜன், வில்லன் மனோஜ், அட்வகேட் ஆக வரும் மதுமிதா அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இயக்குனர் எடுத்துக் கொண்ட கதை களம் வெற்றி பெற்ற இயக்குனர்கள் கூட எடுக்க யோசிக்கும் கதைக்களம். காதலுக்காக இதய மாற்று அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. பேசும் நாக்கும் துண்டிக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் பல விஷயங்கள் காதலுக்காக நடந்திருக்கிறது. இந்தப் படத்தில் காதலனை கைபிடிக்க இயக்குனர் சொல்லிய விஷயம் ஆண் பெண்ணாக மாறுவது பெண் ஆணாக மாறுவது.. இருவரும் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முடிவெடுத்து மணமுடிக்கின்றனர். புதிய முயற்சி இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.

ஆனால் ஒரு சந்தேகம் முதலிரவில் உல்டாவாக மாறிய காதலர்கள், சாந்தி முகூர்த்தத்தை முடித்து காதலி கர்ப்பமாகி விட, பிறகு அவர்களுக்கு ஒரு குழந்தை பிறந்தும் இருவரும் ஏன் திருநங்கையாக வாழ்கின்றனர் என்பது ஒரு கேள்விக்குறி ?

சாரீரம் – இப்படியும் ஒரு காதல்