ரெட் லேபிள் – விமர்சனம்

 

லெனின், அஸ்மின், ஆர்.வி.உதயகுமார், அனுமோகன், முனிஷ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ரெட் லேபிள். படம் என்ன சொல்ல வருகிறது வாருங்கள் பார்ப்போம்.

காலேஜில் பயின்று வரும் மாணவர்களுக்கிடையான தேர்தலில் மந்திரி  மகன் போட்டியிட அவரை எதிர்த்து காலேஜின் சிறந்த மாணவன் போட்டியிட மந்திரியின் மகன் பண பலத்தால், தான் ஜெயிப்பது கடினம் என்ற எண்ணத்தால் காலேஜின் புரொபசர் அந்த காலேஜின் முன்னாள் மாணவரை உதவிக்கு அழைக்கிறார்.

- Advertisement -

உதவிக்கு வந்த நாயகன் லெனின் தேர்தலுடன் தன்  காதலையும் ஜெயிக்க வைக்கும் நோக்கத்தில் லெனின் ஒரு கொலையை செய்து விட அந்த பிணத்தை மறைப்பதும் அதில் இருந்து தப்பிப்பதும் என்பதே மீதி கதை.

நாயகன் லெனின் புதுமுகமாக இருந்தாலும் கதைக்குள் தன்னை புகுத்திக் கொண்டு கதையின் போக்கில் போவதால் கதையின் நாயகனாக சிறப்பாக செய்திருக்கிறார்.

ஆக்சன் ஹீரோவாக களம் இறங்கி இருந்தாலும் ஒரு சராசரி மனிதனைப் போல் சண்டைக்காட்சிகளில் இவர் மட்டும் அடிக்காமல் பல அடிகளை வாங்கியும் கொள்கிறார். அதனால் ஒரு யதார்த்த நாயகனாக நம் முன் தோன்றுகிறார். எதிர்பாராத விதமாக எதிர் நாயகனை அடித்து விட, அவன் மரணம் அடைய அந்த மரணத்தை தற்கொலையாக மாற்றும் முயற்சியில் தோல்வி கண்டாலும் அதிலிருந்து தப்பிப்பது சிறப்பு.

நாயகி அஸ்மின் மந்திரியின் மகள். நாயகனை காதலிக்கும் காதலி. பல வருடங்களுக்கு முன்பு நாயகன் காலேஜில் தேர்தலில் ஜெயிக்கும் போது அவர் மீது காதல் வயப்படுகிறார். பல வருடங்கள் கழித்தும் இன்னும் அந்த காலேஜில் என்ன படிக்கிறார் என்பது அவருக்கு தான் வெளிச்சம்.

மந்திரி ஆர்.வி உதயகுமார் வில்லனாக களம் இறங்கி இருக்கிறார். இயக்கப் பணிகள் இல்லாத காரணத்தால் நடிப்பு பணியில் அடியெடுத்து வைத்திருக்கும் ஆர்வி உதயகுமாருக்கு அடுத்தடுத்து படங்கள் வரும் என்பது நமது எண்ணம்.

இவரின் மகனாக வருபவர் எதிர் நாயகனாக இருந்தாலும் நடிப்பில் சிறப்பாக தன் பங்களிப்பை ஆற்றி இருக்கிறார். சிறப்பு தோற்றத்தில் முனீஸ் காந்த். இவர் எதற்கு வருகிறார், இவர் யார் என்பது சரிவர தெரியவில்லை.

இயக்குனர் கே.ஆர் வினோத் காலேஜ்க்குள் காதலை வைத்து ஏதோ காலேஜ் கதையை சொல்ல வருகிறார் என்று பார்த்தால் அதற்குள் ஒரு க்ரைம் ஸ்டோரியை சிறப்பாக நுழைத்து திரைக்கதையை விறுவிறுப்பாக வடிவமைத்து தன் இயக்கத்தை அழகாக செய்திருக்கிறார்.

எந்த ஒரு இடத்திலும் படத்தில் தொய்வு ஏற்படக் கூடாது என்பதற்காக காட்சிக்கு காட்சி ஒரு பரபரப்புடன் விறுவிறுப்புடன் வடிவமைத்து படம் பார்க்கும் ரசிகனை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். சிறப்பு வாழ்த்துக்கள்.

 

ரெட் லேபிள் – டைட்டில் காரணம் தெரியவில்லை