
மைலாஞ்சி ; விமர்சனம்
ஸ்ரீராம் கார்த்திக், கிரிஷா குரூப், சிங்கம்புலி, முனிஸ்காந்த் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் மைலாஞ்சி. படம் என்ன சொல்ல வருகிறது ?
மலைப் பிரதேசத்திற்கு சென்று பறவைகளை படம் எடுக்கும் போது நாயகன் ஊட்டிக்கு வந்தபோது அங்கே இளஞ்சிட்டான நாயகியை பார்த்து காதல் வயப்படுகிறார்.
ஆனால் நாயகியோ தனது காதலை இன்னும் சொல்லியே இருக்காத காதலனை பார்க்க காத்துக் கொண்டிருக்க, இதையறிந்து அதற்கு உதவுகிறார் நாயகன். இறுதியில் வழக்கம் போல் நாயகன், நாயகி திருமணம் இது மைலாஞ்சி படத்தின் கதைக்களம்.
புதுமையாக எதையாவது சொல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் காதல் கதையை எடுத்துக் கொண்டு இயக்குனர் திரைக்கதை அமைப்பதில் மிகவும் சிரமப்பட்டு இருக்கிறார் என்பது காட்சிக்கு காட்சி தெரிகிறது. ஒவ்வொரு காட்சியும் நகர்வதற்குள் மிகவும் சிரமப்பட்டு வசனங்களை எழுதி காட்சிகளை நகர்த்தி இருக்கிறார். படம் முழுவதும் நாயகனும் நாயகியே முழுவதும் வருவதால் மற்ற கதாபாத்திரங்கள் வெறும் ஜூனியர் ஆர்டிஸ்ட் போல் வருகிறார்கள்.
உதாரணத்திற்கு சிங்கம் புலி, முனீஸ்காந்த் இவர்கள் எல்லாம் இந்த படத்திற்கு ஏன் என்பது புரியவில்லை. கதாநாயகன் ஸ்ரீராம் கார்த்திக் வந்த வேலையை விட்டுவிட்டு காதலிக்காக காதலனை தேடுவது சாதாரண மனிதனை விட்டு ஒரு ஹீரோயிஸத்தை பார்ப்பது போல் இருக்கிறது.
நாயகி கிரிஷா குரூப் அப்பாவியா அல்லது மனவளர்ச்சி குன்றியவரா என்பது அவர் நடிப்பின் மூலம் தெரியப்படுத்திருப்பது நமக்கு தெரியவில்லை. நாயகிக்கு உதவி செய்யும் சிறுவன் காதலைப் பற்றி சொல்வது வயதுக்கு மீறிய செயல். இதை தவிர்த்திருக்க வேண்டியது இயக்குனரின் கடமை.
படத்திற்கு இசை இளையராஜா.. இந்த ஒரு பேனரை வைத்துக்கொண்டு படத்தை ஓட்டி விடலாம் என்பது இயக்குனரின் எண்ணம் என்பது நமக்கு புரிகிறது. அப்படியே என்றாலும் பாடல்கள் எதுவும் சிறப்பாக நமக்கு தெரியவில்லை. எத்தனை வெற்றி கானங்களை கொடுத்த இளையராஜா இந்தப் படத்தில் ஏன் வெற்றியை தரவில்லை என்பது அவருக்கே வெளிச்சம்.
