
மேட் இன் கொரியா ; விமர்சனம்
செண்பா (பிரியங்கா மோகன்) என்ற இளம்பெண், கொரியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையிலான கலாச்சாரப் பாலமாகத் திகழ்ந்த பாண்டிய இளவரசி செம்பவளம் பற்றிய கதையைக் கேட்டு வளர்ந்தவர். இதன் காரணமாக கொரியாவிற்குச் செல்ல வேண்டும் என்பது அவரது கனவாக இருக்கிறது. தனது அடையாளத்தைத் தேடி கொரியாவிற்குச் செல்லும் செண்பா, அங்கு எதிர்கொள்ளும் சவால்களும் சந்திப்புகளுமே படத்தின் மீதிக் கதை
பிரியங்கா மோகன் தனது கதாபாத்திரத்தின் நகைச்சுவையான மற்றும் குறும்புத்தனமான பக்கத்தை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். தனது காதலியைக் கொடுமைப்படுத்தும் ஒரு கொரிய நபருக்கு எதிராக செண்பா ஆவேசப்படும் காட்சி படத்தின் நல்ல தருணங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது
பிரியங்காவின் காதலராக நடித்திருக்கும் ரிஷிகாந்த் தன் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார்
இசைக்கு மொழி கிடையாது என்பதை உணர்த்தும் ஒரு காட்சி மற்றும் பாட்டியின் ரகசியத்தை அறியும் காட்சிகள் சிறப்பாக அமைந்துள்ளன
களங்களுடன் சேர்த்து கதாபாத்திரங்களையும் அழகாக காட்சிப்படுத்தி ரசிக்க வைத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பிரசன்னா குமார். ஹேஷாம் அப்துல் வஹாப்பின் இசையில் பாடல்கள் இனிமையாகவும், பின்னணி இசை மென்மையாகவும் பயணித்து, முக்கிய பங்காற்றியிருக்கிறது
கொரியாவைப் பற்றிய செண்பாவின் ஆர்வம் திரையில் உயிர்ப்புடன் வெளிப்படவில்லை என்றும், அவர் கொரியாவிற்குச் சென்ற பிறகு ஏற்படும் மாற்றங்கள் ஆழமாகப் பதிவு செய்யப்படவில்லை என்பது ஒரு குறை தான்.
கொரியக் கதாபாத்திரங்கள் அனைத்தும் மிகவும் நல்லவர்களாகவும், இந்தியக் கதாபாத்திரங்கள் எதிர்மறையாகவும் மிகவும் ஒற்றைத் தன்மையுடன் சித்தரிக்கப்பட்டுள்ளது ஏன் என்பது இயக்குனர் ரா.காரத்திக்கிற்கே வெளிச்சம்..
செண்பாவின் பயணம் எந்தவிதமான பெரிய போராட்டங்களும் இன்றி மிகவும் எளிதாக அமைந்திருப்பது படத்தின் அழுத்தத்தைக் குறைக்கிறது
