கொம்பு சீவி ; விமர்சனம்

சண்முகபாண்டியன், சரத்குமார், தார்ணிகா, முனிஸ்காந்த், காளிவெங்கட் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் கொம்பு சீவி படம் என்ன சொல்ல வருகிறது வைகை அணை கட்டப்பட்டபோது அதனால் வீடு நிலம் இழந்த கிராம மக்களின் வாழ்வியலை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறார் இயக்குனர் பொன்ராம் படம் என்ன சொல்ல வருகிறது.

90 காலகட்டங்களில் மதுரையில் உள்ள கிராம மக்கள் தங்கள் வாழ்வாதாரத்துக்காக வைகை அணையில் தண்ணீர் வற்றும் போது விவசாயம் செய்தும் தண்ணீர் நிரம்பினால் கஞ்சா தொழில் செய்து வருகின்றனர் இதனால் ஏற்படும் பிரச்சனைகள் இவர்கள் வாழ்க்கை முறைகள் இதுவே கொம்பு சீவி படத்தின் கதை

கதாநாயகன் சண்முக பாண்டியன் விஜயகாந்த் வாரிசு ஆனால் அவர் நடிப்பின் வாரிசு என்றால் ஏற்றுக்கொள்ள முடியுமா என்பதை படம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் இவருடைய உயரம் இவருக்கு மைனஸ் ஆகிறது உயரத்திற்கு ஏற்றார் போல் ஆடைகளை வடிவமைத்தால் எதிர்காலத்தில் இவர் சிறந்த நடிகராக வர வாய்ப்புகள் அதிகம்

- Advertisement -

சரத்குமார் படத்தின் நாயகன் என்றால் இவர்தான் வில்லாதி வில்லன் விராதிசூரன் என ஊர் பெரிய மனிதன் கட்டப்பஞ்சாயத்து கஞ்சா வியாபாரி இப்படி பலவித கதாபாத்திரங்களை உள்வாங்கி நகைச்சுவை பாணியில் வெளிப்படுத்தி இருக்கிறார் படம் முழுவதும் இவரை நம்பியே செல்கிறது இவர் முடிந்த அளவுக்கு படத்தை தோளில் சுமந்து எடுத்து செல்கிறார் விஜயகாந்த் இவருக்கு செய்த நன்றிக்காக தன் நன்றி கடனை திருப்பி செலுத்தி இருக்கிறார்.

தாரணிகா ஒப்போடு ராணியின் வாரிசு பார்ப்பதற்கு கட்டு மஸ்தான உடம்பால் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரமே வருவதற்கு ஆனால் நடிப்பு பத்தாம் க்ளாஸ் படிக்கும் பள்ளியில் மேலை நாடகத்தில் நடிப்பது போல் இருக்கிறது எதிர்காலத்தில் தாயைப் போல இவரும் கவர்ச்சிக்கு செல்வது என்பது நமது எதிர்பார்ப்பு இயக்குனர் பொன்ராம் இவரின் முந்தைய படங்கள் அனைத்தும் வெற்றி படங்கள் தான் அந்த வெற்றியை இந்த படத்தில் தக்க வைத்துக் கொள்ள ரொம்ப சிரமப்பட்டு இருக்கிறார் படம் வெற்றியா என்பது படம் பார்த்து நீங்கள் தான் சொல்ல வேண்டும்

கொம்பு சீவி – சீவவில்லை