காந்தாரா 2 ; விமர்சனம்

 

ரிஷப் ஷெட்டி, ருக்மணி வசந்த், ஜெயராம் மற்றும் பலர் நடிப்பில் வெளிவந்திருக்கும் படம் காந்தாரா 2. படம் என்ன சொல்ல வருகிறது ?

காந்தாரா காடு சிவனின் பூந்தோட்டம்.. அந்த பூந்தோட்டத்தை கைப்பற்ற அண்டை நாட்டு மன்னர்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்பு விளைவித்து வைத்திருக்கும் காட்டுவாசி மக்கள். இந்நிலையில் காடு தாண்டி நகரத்துக்கு வரும் நாயகன், அங்கு நடக்கும் வியாபார சந்தையை பார்த்து தங்கள் காட்டுப் பொருள்களை சந்தையில் விற்று தங்கள் மக்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி செல்கின்றனர்.

- Advertisement -

ஒரு கட்டத்தில் அந்த சந்தை கதாநாயகன் வசம் வந்து விடுகிறது. நாட்டு மன்னரின் மிகப்பெரிய வரி அந்த சந்தையை நம்பி இருக்கிறது. சந்தையை மீட்க மன்னன் காட்டுக்குச் செல்ல அவன் தலை துண்டிக்கப்படுகிறது. மன்னரின் தந்தை மற்றும் அவரின் மகள் சமாதான தூது அனுப்பி கேட்கின்றனர்.

அதாவது அவர்கள் கட்டும் சிவன் கோயிலுக்கு லிங்கம் உங்கள் காட்டில் இருந்து வேண்டுமென்று கேட்க, நாயகன் முழு மனதோடு தங்கள் குலதெய்வமான லிங்கத்தை அவரிடம் ஒப்படைத்து கோவில் கும்பாபிஷேகம் நடத்தி சந்தையையும் அவர்களிடம் விட்டுக் கொடுக்கிறார்.

இந்த நேரத்தில் காட்டுவாசி மக்களின் குழந்தைகள் ஒரு வித்தியாசமான நோய்க்கு உட்பட அதற்கு காரணம் அவர்கள் குலதெய்வங்கள் நகரத்துக்கு சென்றதால் என்று தெரிய வருகிறது. அங்கு செல்லும் கதாநாயகருக்கு மிகப்பெரிய அதிர்ச்சி ஒன்று காத்திருக்கிறது. அது என்ன ? பாருங்கள் காந்தாரா.. -2

நாயகன் ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருக்கும் படம் காந்தாரா 1 வெற்றியின் சுவை இன்னும் மாறாமல் இருக்க, அடுத்த வெற்றியை கொண்டாட நாயகன் ரிஷப் ஷெட்டி தயாராகி விட்டார். படம் முழுக்க இவரின் ராஜாங்கம் தான். சண்டை காட்சிகள் அற்புதம். அதற்கான அரங்க வடிவமைப்புகள் மிகச்சிறப்பு. அதுவும் கட்டவிழ்ந்து  வரும் தேரில் நடக்கும் சண்டைக்காட்சி மிக அற்புதம். கோபத்தில் அவர் பேசும் காட்டு மொழி, காட்டுகத்தல், முக பாவங்களில் நம்மை மிரள வைக்கிறார். சந்தை  கடைகளின் அரங்க வடிவமைப்பு மிக அருமை. இவரின் கண்ணை பார்த்ததும் சிங்கம் ஒதுங்கி செல்வது ஏன் என்று இறுதிக்காட்சியில் நீங்கள் தெரிந்து கொள்வீர்கள்.

ருக்மணி வசந்த் மாமன்னரின் மகள். அழகு சிலை என்பதா, பளிங்கு கல் என்பதா ? வெண்ணையில் வடித்த அங்கம் என்பதா ? அந்த அளவுக்கு அவரின் அழகு நம்மை அசர வைக்கிறது. நாயகனிடம் அவர் காதலை சொல்ல வரும்போது நாயகன் ஒதுங்கி செல்வது கதாநாயகனுக்குரிய பந்தா என்று சொல்லலாம். இவரின் கதாபாத்திரம் இறுதிக்காட்சியில் நம்மை பயமுறுத்த செய்கிறது. இவரின் சண்டைக் காட்சிகளும் சிறப்பு.

மன்னனாக இருந்த ஜெயராம் மணி முடியை தன் மகனுக்கு தர, மகன் குடி கும்மாளம் என ஒரு கோமாளி போல் ஆட்சியை நடத்த, அதன் விளைவு அவரின் உயிர் பறிபோகிறது. மற்ற கதாபாத்திரங்களும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக செய்தாலும் பாராட்டுக்குரியவர்கள். ஒளிப்பதிவாளரும் இசை அமைப்பாளரும் இந்த இருவரின் பங்களிப்பு படத்தின் வெற்றிக்கு ஒரு அடித்தளம் ஆகிறது. அடுத்தது கலை இயக்குனர்.. அனைத்து அரங்க அமைப்புகளும் மிக அழகாக வடிவமைத்திருக்கிறார்.

காந்தாரா-2 ; சிவனின் ருத்ர தாண்டவம்