ஜாக்கி – விமர்சனம்

 

யுவன் கிருஷ்ணா, ரிதன் கிருஷ்ணா, அம்மு அபிராமி, மதுசூதனன் ராவ், கே.பி.ஒய் யோகி  நடிப்பில்  பிரகபல் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் ஜாக்கி. படம் என்ன சொல்ல வருகிறது ?

மதுரை மற்றும் சுற்று வட்டாரப்பகுதிகளில் நடக்கும் கிடா சண்டை போட்டியை மையப்படுத்திய கதையை எடுத்திருக்கிறார்கள். இந்தக் கிடா போட்டி மூலம்   ஆடுகளுக்கிடையேயான அல்ல, மனிதர்களுக்கு இடையேயான. மரியாதை, அவமானம், பகைமை ஆகியவற்றை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.  அதேசமயம் நாயகன் தன் ஆட்டை தன் உறவு போல் பாவிக்கிறார். எதிர் நாயகனோ ஆட்டை தன் அடியாள் போல் பயன்படுத்துகிறார். இறுதியில் யார் வெல்கிறார்கள் என்பதே படத்தின் மீதி கதை.

- Advertisement -

யுவன் கிருஷ்ணா, ராமராகவே வாழ்ந்திருக்கிறார். அவரது பார்வையில்  வெளிப்படும் தைரியமும், ஒரு கிராமத்து நாயகனின் இயல்பான வீரத்தை நமக்கு உணர்த்துகிறது. கார்த்தியாக வில்லன் ரிதன் கிருஷ்ணாவின் ஆணவம் மிகச்சிறப்பு.

நாயகி அம்மு அபிராமி பற்றி நாம் சொல்லியே ஆக வேண்டும். எதார்த்தமான பக்கத்து வீட்டு பெண்ணின் முகம் எதார்த்தமான காதல் என மிக எதார்த்தமாக அந்த கதாபாத்திரத்தை தன்னுள் வாங்கி வெளிப்படுத்தி இருக்கிறார்.

இயக்குனருக்கு நமது வாழ்த்துக்கள். இரண்டு ஆடுகளை முன்னோடி கதாபாத்திரமாக  வைத்துக்கொண்டு படத்தை இயக்குவது மிகக் கடினம். ஏனென்றால் மோதுவது மனிதர்கள் அல்ல.. ஆடுகள்.. அந்த ஆடுகள் சரியாக அந்தப் போட்டியில் சிறப்பு செய்யவில்லை என்றால் எந்த கதாபாத்திரமும் சோபிக்காது. அந்த வகையில் ஆடுகளுக்கு, அதை தயார் செய்தவர்களுக்கு, இயக்குனர்க்கு நமது வாழ்த்துக்களை கண்டிப்பாக சொல்லி ஆக வேண்டும்,

இரண்டு மணி நேரம் ரசிகனை எந்த ஒரு சோர்வும் ஏற்படாமல் திரைக்கதை வடிவமைத்து இந்தளவுக்கு சிறப்பாக இயக்கியிருக்கும் இயக்குனர் மிகப்பெரிய இடத்தை தொடுவார் என்பது நமது நம்பிக்கை. அவருக்கு உறுதுணையாக இருந்த ஒளிப்பதிவாளர் இசையமைப்பாளர் அனைவருக்கும் நமது பாராட்டுக்கள்.

ஜாக்கி – கௌரவம