ஹேப்பி ராஜ் – விமர்சனம்.

ஜி.வி. பிரகாஷ் குமார் சில இடங்களில் இயல்பாக நடித்தாலும், முழுப் படத்தையும் தாங்கும் அளவுக்கு தாக்கம் இல்லை. உணர்ச்சி காட்சிகள் மட்டும் ஓரளவு வேலை செய்கின்றன.

ஜார்ஜ் மரியன் தான் படத்தின் முக்கிய ஆதாரம். அவரின் நடிப்பு சில காட்சிகளில் கவனம் ஈர்க்கிறது.

ஸ்ரீ கெளரி பிரியா வழக்கமான கதாபாத்திரத்தில் தான் இருக்கிறார். அப்பாஸ் தனது பாத்திரத்தை சரியாக செய்தாலும், சில இடங்களில் ஓவராக தெரிகிறார்.

- Advertisement -

இசையில் ஜஸ்டின் பிரபாகரன் பாடல்கள் சாதாரணமாக இருக்கின்றன. தொழில்நுட்ப அம்சங்களும் பெரியதாக பேசும்படி இல்லை.

இயக்குநர் மரியா ராஜா இளஞ்செழியன் எடுத்த கருத்து நன்றாக இருந்தாலும், திரைக்கதை மிகவும் பழக்கமான பாதையில் செல்வதால் சுவாரஸ்யம் குறைகிறது.

மொத்தத்தில்: ‘ஹேப்பி ராஜ்’ – சில நல்ல அம்சங்கள் இருந்தாலும், மொத்தமாக சுமாராக மட்டுமே இருக்கிறது