அனோமி –  விமர்சனம்

 

தடவியல் நிபுணரான பாவனா, தனது தம்பியின் மரணத்தை விசாரிக்கும் போது அது சாதாரண தற்கொலை அல்ல; தொடர்ச்சியான சைக்கோ கொலைகளுடன் தொடர்புடையது என்பதை கண்டுபிடிக்கிறார்.. மிகக்குறைந்த தடயங்களை அடிப்படையாகக் கொண்டு உண்மையை கண்டுபிடிக்க அவர் மேற்கொள்ளும் விசாரணையே ‘அனோமி’ படத்தின் மையக்கதை.,

நாயகியாக நடித்துள்ள பாவனா, அமைதியானாலும் உறுதியான தடவியல் நிபுணராக முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி கதையை தாங்கிச் செல்கிறார்.. ஆரம்பத்தில் சாதாரணமாக தோன்றும் ரஹ்மான் கதாபாத்திரம், பின்னர் வரும் திருப்பத்தின் மூலம் கதைக்கு முக்கிய பலமாக மாறுகிறது..

- Advertisement -

ஒளிப்பதிவாளர் சுஜித் சாரங் பதற்றம் நிறைந்த காட்சிகளை திறமையாக பதிவு செய்துள்ளார்.. ஹர்ஷவர்தன் ராமேஸ்வரின் பின்னணி இசை திரில்லர் உணர்வை அதிகரிக்கிறது. கிரியன் தாஸ் செய்த படத்தொகுப்பு, படத்தின் வேகத்தையும் சஸ்பென்ஸையும் நன்றாக தக்க வைத்திருக்கிறது.

இயக்குநர் ரியாஸ் மராத், சைக்கோ திரில்லர் கதையை அறிவியல் சார்ந்த கோணத்தில் சொல்ல முயன்றிருப்பது படத்திற்கு வித்தியாசத்தை தருகிறது. குறிப்பாக இரண்டாம் பாதியில் வரும் திருப்பங்களும், கொலைக்கான காரணத்தை விளக்கும் விதமும் படத்தின் சுவாரஸ்யத்தை உயர்த்துகின்றன.

மொத்தத்தில், ‘அனோமி’ – வித்தியாசமான கருத்தை திரில்லர் பாணியில் சொல்ல முயன்றுள்ள கவனிக்கத்தக்க திரைப்படம்.