தி பாரடைஸ் ; விமர்சனம்

 

நடிப்பு: நானி மோகன் பாபு, கயாடு லோஹர், சோனாலி குல்கர்னி, ராகவ் ஜுயல்
இயக்கம்: ஸ்ரீகாந்த் ஒடேலா (தசரா இயக்குனர்)
இசை: அனிருத்

 

படம் என்ன சொல்ல வருகிறது
காலம் 1980-கள். இடம் செகந்திராபாத்தில் உள்ள பாரடைஸ் ஏரியா. அங்கே 200 வருஷமாக ‘சவாரி’ எனும் நாடோடி பழங்குடி மக்கள் அடையாளம் இல்லாமல் வாழ்கிறார்கள். அவர்களை தனது கட்டுப்பாட்டில் வைத்து ஆட்டிப்படைக்கிறது சிகஞ்சா மாலிக் (மோகன் பாபு) குடும்பம்.

சவாரி மக்களின் தலைவி சம்மக்கா (சோனாலி குல்கர்னி) குடியுரிமைக்காக போராடுகிறார். அவருக்கு மகனாக பிறக்கிறான் ஜடல் என்கிற தாகட் (நானி). சிறு வயதிலேயே மாலிக் குடும்பத்தை எதிர்த்து சிறைக்கு போகிறான் ஜடல்.

சிறையில் இருந்து திரும்பி வரும் ஜடல், தன் தாய் மீதே வெறுப்பில் இருக்கிறான். ஆனால் தன் மக்களின் உரிமைக்காக, தன் அடையாளத்திற்காக மீண்டும் மோகன் பாபு குடும்பத்தை எதிர்த்து ரத்தம் தெறிக்க போராடுகிறான். ஜடல் ஜெயித்தானா? சவாரி மக்களுக்கு அடையாளம் கிடைத்ததா? என்பதே மீதிக்கதை.

 

நானி – இதுவரை க்ளாஸ் ஹீரோவாக பார்த்த நானியை, முழு ரக்கட் லுக்கில், ஜடை முடியுடன் பார்க்கவே மிரட்டல். அவரது அர்ப்பணிப்பு அசுரத்தனமாக இருக்கிறது. ஆனால் இந்த மாஸ் அவதாரம் நானிக்கு செட் ஆகலை நல்லா இருந்த நானி ஏன் இப்படி ஆனார் என்று தெரியவில்லை

முதல் 20 நிமிடம், இன்டர்வெல் பிளாக் – படத்தின் உச்சம். ‘ஆயா ஷேர்’ பாடல், இன்ட்ரோ ஃபைட், ஹோட்டல் ஃபைட் எல்லாம் தியேட்டரில் விசில். நமக்குத் தலைவலி

மோகன் பாபு வில்லனாக மிரட்டியிருக்கிறார், சோனாலி குல்கர்னி தாயாக அபாரம். ஆனால் கயாடு லோஹர் கதாபாத்திரம் டம்மி, கிளாமருக்காக மட்டுமே பயன்படுத்தியது போல் இருக்கிறது. ராகவ் ஜுயல் வீணடிக்கப்பட்டுள்ளார்.

அனிருத் BGM – சில இடங்களில் தூக்கி நிறுத்துகிறது, சில இடங்களில் சத்தமாக இருக்கிறது

2 மணி 49 நிமிடம் நீளம் அதிகம். இரண்டாம் பாதி முழுக்க அதீத வன்முறை, ரத்தக்காட்சிகள். A சர்டிஃபிகேட். தாய்-மகன் எமோஷன் எதிர்பார்த்த அளவு கனெக்ட் ஆகவில்லை. ஸ்லோ-மோஷன், லாஜிக் மீறல்கள் அதிகம்.

தசரா போல ஒரு அழுத்தமான கதையை எதிர்பார்த்தவர்களுக்கு இது பழைய டெம்ப்ளேட் கதையாக தெரியலாம்.

மொத்தத்தில்: தி பாரடைஸ் – நானியின் நடிப்பு, இன்டர்வெல், தயாரிப்பு தரத்திற்காக ஒருமுறை பார்க்கலாம். மாஸ் ஆக்‌ஷன் பிரியர்களுக்கு பிடிக்கும், ஆனால் ‘

தி பேரடைஸ் – அடையாளத்தை தேடும் இந்தியன்
ரேட்டிங் 2/5

Comments (0)
Add Comment