நடிப்பு: அமர் ராமச்சந்திரன், நேஹா அமர், நிமிஷா நம்பியார், தீபக் பிரபாகரன், மறைந்த பாலாசிங்
இயக்கம்: அமர் ராமச்சந்திரன்
இசை: அவுசேப்பச்சன் | ‘ பாடல் வரிகள்:* தாமரை |
போர் ஒரு நாட்டை அல்ல, ஒரு குழந்தையின் பசியை கூட எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்.
படம் என்ன சொல்ல வருகிறது
இலங்கை போர்க்காலம். ஒரு குண்டுவெடிப்பில் மனைவியை பறிகொடுக்கும் ஒரு தந்தை, தன் 8 வயது மகளை மட்டும் கையில் பிடித்துக்கொண்டு தமிழகம் நோக்கி தப்பித்து வருகிறார். இதுதான் படம்.
படகில் ஏறுவது முதல், முகாமில் வாழ்வது வரை அவர்களின் ஒவ்வொரு நாளும் உயிர் பிழைப்பு போராட்டம். தந்தைக்கு மகளின் எதிர்காலம் பற்றிய பயம், மகளுக்கோ போர் என்றால் என்னவென்றே தெரியாத குழந்தை மனம்.
வழக்கமான போர் படங்கள் போல துப்பாக்கி சத்தம், ரத்தம் என்று காட்டாமல், இயக்குனர் ஒரு குடும்பத்தின் வழியே போரை காட்டியிருக்கிறார். இதுதான் படத்தின் பெரிய பலம்.
அமர் ராமச்சந்திரன் பேசுவதை விட அவரது கண்கள் பேசுகின்றன. மனைவியை இழந்த வலி, மகளை காப்பாற்ற துடிக்கும் பதற்றம் என யதார்த்தம். அவர் மகளாக வரும் நேஹா அமர் தான் படத்தின் உயிர். போரை பார்த்தும் குழந்தைக்கே உரிய குறும்பு மாறாத நடிப்பு. மறைந்த நடிகர் பாலாசிங் ஆதரவற்றவர்களுக்கு உதவும் மனிதராக வந்து மனதில் நிற்கிறார்.
அவுசேப்பச்சனின் பின்னணி இசை படத்தை தாங்குகிறது. தாமரையின் ‘வாடா என் செல்லக்குட்டி’, ‘ஆகாயம் மேலே’, ‘தலைவாரி பூச்சூடி’ பாடல்கள் வலியை இன்னும் ஆழமாக்குகின்றன. பிரசாந்த் பிரணவத்தின் கேமரா போரின் பதட்டத்தையும், முகாமின் இருளையும் அப்படியே காட்டுகிறது.
தமிழகத்துக்கு வந்த பிறகு நடக்கும் சில காட்சிகள் சினிமாத்தனமாக உள்ளன. சந்திக்கும் அத்தனை பேரும் நல்லவர்களாகவே இருப்பது,
‘தாய்நிலம்’ ஈழத் தமிழர்களின் கதை மட்டும் அல்ல. உலகில் எங்கு போர் நடந்தாலும், வீடு, நிலம், அடையாளம் அனைத்தையும் இழந்து அகதியாகும் ஒவ்வொரு குழந்தையின் கதை. போர் ஒரு நாட்டை அல்ல, ஒரு குழந்தையின் பசியை கூட எப்படி மாற்றுகிறது என்பதை சொல்லும் படம்.
*ரேட்டிங்: 3./5