ஹிப்ஹாப் தமிழா ஆதி (ஜீவா), கேதிகா சர்மா, சைத்ரா ஆச்சார், ரம்யா ரங்கநாதன், ஹர்ஷத் கான், கருணாஸ், நாசர், யோகிபாபு, பாபா பாஸ்கர்நடிப்பில்
இயக்கம் & இசை: ஹிப்ஹாப் தமிழா ஆதி
தயாரிப்பு அவ்னி மூவிஸ் – குஷ்பு, பென்ஸ் மீடியா – ACS அருண்குமார்
மூன்று தலைமுறை இசை கதை.
80-களில் கானா பாடலை கலக்கலாக பாடும் தாஸ். அவரது திறமையை பார்த்து பெரிய மியூசிக் லேபிளின் வாரிசு அவரை கூட்டி வருகிறார். ஆனால் அங்கே நடக்கும் வாரிசு அரசியலால் தாஸுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது.
அதிலிருந்து கட் – இப்போது ஜீவா (ஆதி). ஒரு சாதாரண பப்-இல் ஹிப்ஹாப் பாடும் இளைஞன். கானா இசையை உலக அளவில் கொண்டு போக வேண்டும் என்பது அவன் கனவு.
அவனது காதலி ஷீலா (கேதிகா) ஒரு வாரிசு நடிகரிடம் அவனை அறிமுகம் செய்கிறாள். அங்கே ஜீவா அவமானப்படுகிறான்
ஜீவா தனது தந்தை (பாபா பாஸ்கர்) உறவில் ஏற்படும் விரிசல், தாத்தா தாஸின் கனவை எப்படி நிறைவேற்றினான்? கானாவை உலக மேடைக்கு கொண்டு போனானா? என்பதே படம்.
இது பக்கா இசை கச்சேரி சார். படம் முழுக்க 12 பாடல்கள். ‘பப்பாளி பழமே’ பாடலில் ஆரம்பித்து, ‘கலைவாணியே’ பாடல் வரை மனதை தொடுகிறது. ‘கலைவாணியே’ பாடல் தான் படத்தின் சோல்.
ஹிப்ஹாப் ஆதி – இயக்குனராக, நடிகராக, இசையமைப்பாளராக மூன்றிலும் ஸ்கோர் செய்கிறார். தந்தை-மகன் எமோஷன் காட்சிகளில் செம நடிப்பு. ஜென்-ஸி கனெக்ட் முதல் பாதி முழுக்க இருக்கு.
3 ஹீரோயின்களில் ரம்யா ரங்கநாதன் தான் படத்தின் பலம் – வலுவான ரோல். சைத்ரா குறைவாக வந்தாலும் பெரிய தாக்கம். கேதிகா அழகு
கருணாஸ் நாசருக்கு டப்பிங் கொடுத்த இடம் தியேட்டரில் சிரிப்பு வெடிக்கிறது. யோகிபாபு, பாபா பாஸ்கர், ஹர்ஷத் கான் எல்லாரும் கச்சிதம்.
முதல் பாதி கொஞ்சம் திசை இல்லாமல் தடுமாறுகிறது, உண்மையான கதை இடைவேளைக்கு பிறகு தான் ஆரம்பிக்கிறது. இரண்டாம் பாதி ஏற்கனவே பார்த்த கதை போல இருந்தாலும் எமோஷனல் காட்சிகள் காப்பாற்றுகிறது.
மொத்தத்தில் மீசைய முறுக்கு 2 இளைஞர்களுக்கான ‘ ட்ரீட். கானா என்பது லோக்கல் இல்லை, அது வாழ்வியல் என்று ஆதி அழகாக சொல்லியிருக்கிறார். கனவுகளை துரத்தும் அனைவரும் ஒருமுறை பார்க்கலாம்.
ரேட்டிங்: 3.5 / 5